உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (43) – பரத்வாஜாசனம் (Bharadvaja’s Twist)

பரத்வாஜாசனம் என்னும் ஆசனம் பரத்வாஜ முனிவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

அமர்ந்த நிலையில் செய்யப்படும் ஆசனமான பரத்வாஜாசனம் மூலாதாரம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்களைத் தூண்டுகிறது. மூலாதாரச் சக்கரத்தின் சீரான இயக்கம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. அனாகதம் எனப்படும் இருதயச் சக்கரத்தின் சீரான செயல்பாட்டினால் அன்பு, காதல், கருணை போன்ற உணர்வுகள் மனதை நிறைக்கின்றன.

Bharadvaja's Twist benefits

பரத்வாஜாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு முதுகுத்தண்டை பலப்படுத்தவும் செய்கிறது.
  • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
  • தோள், இடுப்பு, முட்டி, கணுக்கால் ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது.
  • மேல் மற்றும் நடு முதுகு வலியைப் போக்க உதவுகிறது.
  • சையாடிக் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.
செய்முறை
  • விரிப்பில் கால்களை நீட்டி அமரவும்.
  • வலது காலை மடித்து வலது பாதத்தை வலது தொடையின் வெளிப்பக்கமாகத் தரையில் வைக்கவும்.
  • இடது காலை மடித்து இடது பாதத்தை வலது தொடையின் மீது இடுப்பின் அருகே வைக்கவும்.
  • உங்கள் மேல் உடலை இடது பக்கமாகத் திருப்பவும்.
  • உங்கள் இடது கையை முதுகுக்குப் பின்னால் கொண்டு சென்று வலது பக்கமாகக் கொண்டு வந்து உங்களின் இடது கால் விரல்களைப் பற்றிக் கொள்ளவும்.
  • தலையை இடதுப்பக்கமாகத் திருப்பவும்.
  • வலது கையை இடது முட்டியின் மீது வைக்கவும்.
  • 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் காலை மாற்றி இதைத் திரும்பவும் செய்யவும்.
குறிப்பு

அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்ப்பது நல்லது.

தீவிரமான முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (44) – மாலாசனம் / நமஸ்காராசனம் (Garland Pose / Squat Pose)

வடமொழியில் ‘மாலா’ என்றால் மாலை, ‘நமஸ்காரம்’ என்றால் வணக்கம். அதாவது இந்த ஆசனத்தை செய்யும் போது உடல் மாலை வடிவில் இருப்பதால் மாலாசனம் என்றும் இதில் வணக்கம் சொல்வதால் நமஸ்காராசனம் எனவும் அழைக்கப்படுகிறது. இது

Read More »

இன்று ஒரு ஆசனம் (42) – பத்த கோணாசனம் (Bound Angle Pose)

வடமொழியில் ‘பத்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Bound Angle Pose, Butterfly Pose மற்றும் Cobbler’s Pose என்றும் அழைக்கப்படுகிறது. பத்த கோணாசனம் மூலாதாரம்

Read More »

இன்று ஒரு ஆசனம் (41) – ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் (Upward Seated Angle Pose)

நாம் அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் செய்முறையை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அந்த ஆசனத்தில் ஒரு கால் மட்டும் மேலே நீட்டப்பட்டிருக்கும். ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனத்தில் இரண்டு கால்களுமே பக்கவாட்டில் நீட்டப்பட வேண்டும். வடமொழியில் ‘ஊர்த்துவ’

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்