‘துலா’ என்ற வடமொழி சொல்லுக்கும் ‘தராசு’ என்று பொருள். இங்கு தராசு என்பது சமநிலை என்பதை குறிப்பதாக உள்ளது; அதாவது, துலாசனத்தில் உடலை சமநிலையில் கைகளால் தாங்குவதால் இந்த ஆசனம் துலாசனம் என்று அழைக்கப்படுகிறது.
துலாசனம் பயிலும் போது மணிப்பூரக சக்கரம் தூண்டப்பட்டு உடலிலும் மனதிலும் ஆற்றல் பெருகுகிறது. மணிப்பூரக சக்கரம் அண்டத்திலிருந்து பிராண சக்தியை கவருகிறது. இந்த சக்கரத்தின் சீரான இயக்கம் மன உறுதியையும், தன்னம்பிக்கையையும், சுயமதிப்பையும் வளர்க்கிறது. இதன் மூலம் மனதிலும் சமநிலை ஏற்படுகிறது.
துலாசனத்தின் மேலும் சில பலன்கள்
- சீரண மண்டலத்தை பலப்படுத்தி சீரணத்தை முன்னேற்றுகிறது.
- தோள்களையும் கைகளையும் பலப்படுத்துகிறது.
- வயிற்று தசைகளை பலப்படுத்துகிறது.
- தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
- கவனத்தை கூர்மையாக்குக்கிறது.
- மன அழுத்தத்தை போக்குகிறது.
செய்முறை
- பத்மாசனத்தில் அமரவும். பத்மாசனம் செய்முறையை பார்க்க இங்கே click செய்யவும்.
- உள்ளங்கைகளை உடம்பின் அருகில் தரையில் வைக்கவும்.
- மூச்சை வெளியேற்றிக் கொண்டே கைகளை தரையில் பலமாக ஊன்றி, வயிற்று தசைகளை சுருக்கி, தரையிலிருந்து உடலை உயர்த்தவும்.
- 10 முதல் 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் பழைய நிலைக்கு வரவும்.
குறிப்பு
உடலை உயர்த்த முடியவில்லையென்றால், உறுதியான பொருள் அல்லது yoga block-ஐ தரையில் வைத்து அதன் மேல் கைகளை வைத்து உடலை உயர்த்தவும்.
தோள், மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.
முட்டி, கணுக்கால் பிரச்சினை உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.
இன்று ஒரு ஆசனம் (36) – பரிவ்ருத்த ஜானு சிரசாசனம் (Revolved Head-to-Knee Pose)
நாம் முன்னரே ஜானு சிரசாசனம் பற்றியும் அதன் பலன்கள், செய்முறை பற்றியும் பார்த்தோம். பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தில் ஒரு கை உடலை சுற்றி வந்து காலை பிடிப்பதாக இருக்கும். ‘பரிவ்ருத்த’ என்ற சொல்லுக்கு ‘சுற்றி’
இன்று ஒரு ஆசனம் (34) – சிங்காசனம் / சிம்ஹாசனம் (Lion Pose)
‘சிம்ஹ’ என்ற வடமொழி சொல்லின் பொருள் ‘சிங்கம்’ என்பதாகும். சிங்கத்தின் நாக்கு ஒரு ஆயுதம். இரையின் மாமிசத்தை கிழித்தெடுக்கும் சக்தி சிங்கத்தின் நாக்குக்கு உண்டு. சிங்காசனத்தில் நாம் கர்ஜிப்பதன் மூலம் பிலடிஸ்மா எனப்படும் தோள்பட்டை
இன்று ஒரு ஆசனம் (33) – பத்ராசனம் (Auspicious Pose / Gracious Pose)
‘பத்ர’ என்ற வடமொழி சொல்லுக்கு ‘புனிதமான’ என்றும் ‘கருணையுள்ள’ என்றும் பொருள் உண்டு. பத்ராசனம் என்றால் புனிதமான ஆசனம், கருணையான ஆசனம். பத்ராசனம் மூலாதார சக்கரத்தை தூண்டி படைப்பாற்றல் திறனை வளர்க்கிறது. மறைந்திருக்கும் ஆற்றல்களை