வனப்பு என்பது வெறும் உடல் சார்ந்தது அல்ல; வெளித்தோற்றத்தைச் சார்ந்ததும் அல்ல என்பதை நாம் அறிவோம். வனப்பு என்பது நம் உடல் மற்றும் மன நலன். சத்தான உணவு, உறக்கம், பயிற்சி, ஓய்வு, மன நிலை என இவை யாவுமே நம் உடல், மன வனப்பைச் செழுமைப்படுத்துகின்றன.
மண்ணுக்கேற்ற உணவு முறையைப் பின்பற்றி வாழும் போது உடல் நலம் சிறப்பது மட்டுமல்லாமல் மரபணுக்கள் வழியாகக் காலம் காலமாக கடத்தப்பட்டு வரும் அறிவும், பண்பும், வாழ்க்கை முறையும் நம்மில் இயல்பாகவே நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
– திருக்குறள் 942
இத் திருக்குறளின் பொருள், “முன் உண்ட உணவு செரித்துள்ளதை உறுதி செய்து கொண்டு அடுத்த வேளை உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டால் உடலுக்கு மருந்து என்று எதுவும் தேவைப்படாது.”
திருவள்ளுவர் கூறுவது போல், அருந்தியது அற்ற பின், அதாவது, சீரணித்தப் பின் அடுத்த வேளை உணவை உண்டால்தான் உடலில் உயிராற்றல் உண்டாகும். அப்படி சீரணம் செழிப்பாக அமைய வேண்டுமானால் நம் உடல் அணுக்களில் ஆண்டாண்டு காலமாய் கலந்திருக்கும் நமது பாரம்பரிய உணவு மற்றும் சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் என்பதே போற்றி உண்பதாகும்.
‘போற்றி உணின்’ என்னும் இப்பகுதியில் கொடுக்கப்படும் உணவு வகைகளையும் திருவள்ளுவரின் கூற்றுப்படியே போற்றி உண்டால், மருந்தில்லாத பெருவாழ்வு வாழலாம்.
சிறுதானிய வகைகளும் நன்மைகளும்
நவீனமயமான உலகில், காலம் மற்றும் சூழலுக்கேற்ப நம் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகி இருக்கிறது. அதிகாலையிலேயே விழித்து …
சாமையின் நன்மைகள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் உணவுப் பழக்கங்களில் கோலோச்சிய சாமையின் பலன்கள் அபாரமானது. தொல்காப்பியத்தில் முல்லை நில மக்களின் பிரதான உணவுகளில் சாமையும் வரகும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன…
சாமை உப்புமா
“உப்புமாவின் சுவையே அலாதி” என்றால் இந்தப் பக்கத்தை விட்டு வெளியேறக் கூடியவரா நீங்கள்? அது என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான சிற்றுண்டி வகைகளைப் போல் அல்லாமல் …
சாமை கிச்சடி
சாமையில் உப்புமா செய்வதைப் பற்றி இதற்கு முந்தைய பதிவொன்றில் நாம் பார்த்திருக்கிறோம். இன்று சாமை கிச்சடி செய்முறையைப் பார்க்கலாம். சாமை கிச்சடி தயாரிக்க கைவசம் சில காய்கள் …
சாமை தோசை
தோசை விரும்பிகளே! இதற்கு முந்தைய பதிவுகளில் சாமை உப்புமா மற்றும் சாமை கிச்சடி செய்முறைகளைப் பார்த்தோம் அல்லவா? உங்களுக்காக, இதோ சாமை தோசை செய்வது எப்படி என்று …
திணையின் நன்மைகள்
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயர் பெற்ற பழந்தமிழர் தாயகத்தில் வீட்டு முன்பகுதியில் திண்ணையும் வீட்டு சமையலறையில் திணையும் நிச்சயமாகக் காணக் கூடியதாகும். சமீப வருடங்களில், திண்ணை காணாமல் போய் விட்டது; திணையின் பயன்பாடு குறைந்து விட்டது. ஆனால், கொரோனா …
திணை வெங்காய ரவை தோசை
முதலிலேயே சொல்லி விடுகிறேன்; இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் திணை வெங்காய ரவை தோசை செய்ய வழக்கமான (அரிசி + உளுந்து) தோசை மாவு தேவை. இன்னொன்றையும் முதலிலேயே …
சமச்சீர் உணவின் நன்மைகள்; பழந்தமிழர் வாழ்வில் சமச்சீர் உணவு
சமச்சீர் உணவு என்கிற பதம் சமீப வருடங்களில் மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், காலம் காலமாக நம் முன்னோர்கள் …
கரிநீரகியின் நன்மைகள் மற்றும் கரிநீரகி குறைப்பாட்டின் அறிகுறிகள்
உடலுக்கு அதிக அளவில் தேவைப்படும் பேரூட்டச்சத்துகளில் ஒன்றான கரிநீரகி, உடலின் ஆற்றலுக்கு அத்தியாவசியமானது…
புரதச் சத்தின் நன்மைகளும் புரதக் குறைபாட்டின் அறிகுறிகளும்
முந்தைய பதிவில் கரிநீரகியின் நன்மைகள் மற்றும் கரிநீரகி குறைபாட்டின் அறிகுறிகள் குறித்து பார்த்தோம். இன்று, புரதத்தின் நன்மைகள், புரதக் குறைபாடால் …
பழைய சோறின் நன்மைகள்
காலை உணவாக பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த காலம் மாறி இப்போது சிற்றுண்டிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. பல வீடுகளிலும் இட்லி, தோசை, பொங்கல், பூரி …
கொழுப்பு சத்தின் நன்மைகளும் கொழுப்பு குறைபாட்டின் அறிகுறிகளும்
நம் உடல் நலத்திற்கு அத்தியாவசியமான பேரூட்டச்சத்துகளில் கொழுப்பு சத்தும் ஒன்று. கொழுப்புச் சத்து நம் உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு, அணுக்களின் …
மண்பானை தண்ணீரைக் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்
சமீப வருடங்களில் மண்பானை மறுபிறப்பு எடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இயற்கையோடு ஒன்றி வாழும் ஊர்ப்புறங்களில் கூட மண்பானை சமையல் குறைந்திருந்த வேளையில், உடல் நலம் பற்றிய விழிப்புணர்வின் காரணமாய் சமையலறையில் மண்பானைகள் …