அர்த்த பூர்வோத்தானாசனம் என்னும் இந்த ஆசனத்தின் வடமொழி பெயரில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘பூர்வ’ என்றால் ‘கிழக்கு’, ‘உத்’ என்றால் ‘தீவிரம்’ (intense), ‘தான்’ என்றால் ‘நீட்டுவது’ (to stretch), ‘ஆசனம்’ என்றால் ‘நிலை’; அதாவது, பாதி கிழக்கு பகுதியை தீவிரமாக நீட்டும் நிலை. இந்த நிலையில் பார்ப்பதற்கு, ஒரு மேசை போலத்தான் இருக்கும். ஆங்கிலத்தில் Reverse Table என்பது சரியான பொருத்தமாகத் தெரியவில்லை.
இந்த ஆசனத்தில் நிற்பது மணிக்கட்டு, கை, தோள், கால், தொடை என நான்கு கால்களும் பலமாகும். ஆனாலும், இதன் பலன் என்பது இடுப்பும், முதுகுத்தண்டு புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கி தள்ளப்பட்டு அதிலேயே நிற்பதனால் முதுகுத்தண்டு, முதுகு தசைகள், இடுப்பு மட்டுமல்ல, உடலின் முன் பகுதி (கிழக்கு பகுதி) உந்தப்படுகிறது. இதனால் அனைத்து உள் உறுப்புகளும் நன்றாக இயங்குகிறது. மேலும் இரத்த ஓட்டம் தலைக்கு நன்றாகப் பாய்ச்சப்படுகிறது. இந்த பலனுக்காகத்தான் நான்கு கால்களில் நிற்பது. கை, கால்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் துணை விளைவுகளாகும்.
அர்த்த பூர்வோத்தானாசனத்தின் மேலும் சில பலன்கள்
- நுரையீரலை பலப்படுத்துகிறது.
- உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.
- மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.
செய்முறை
- விரிப்பில் கால்களை நீட்டி தண்டாசனம் நிலையில் அமரவும்.
- கால் முட்டியை மடக்கி பாதங்களை தரையில் வைக்கவும்.
- கைகளை புட்டத்திற்கு சில அங்குலம் பின்னால் தரையில் வைக்கவும். கை விரல்கள் உங்களை நோக்கியவாறு இருக்க வேண்டும்.
- பாதங்களையும் கைகளையும் தரையில் அழுத்தி மூச்சை உள்ளிழுத்தவாறே இடுப்பை மேலே உயர்த்தவும். மார்பிலிருந்து கால் முட்டி வரை ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
- கைகள் நேராக இருக்க வேண்டும். மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், கணுக்கால்கள் கால் முட்டிக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும்.
- தலையை பின்னால் சாய்க்கவும்.
- 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், உடலை தளர்த்தி தரையில் அமர்ந்து கால்களை நீட்டி தண்டாசனம் நிலையில் அமரவும்.
குறிப்பு
முதுகு, இடுப்பு, தோள், மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும்.
கழுத்து வலி உள்ளவர்கள் தலையை பின்னால் சாய்க்காமல் நேராக வைக்கவும்; அல்லது மார்பில் முகவாய் படுமாறு வைக்கவும்.
இடுப்பை முடிந்த அளவு மேலே உயர்த்தவும். பழகப் பழக நன்றாக உயர்த்த வரும்.
குறிப்பிட்ட நேரம் வரை இந்த நிலையில் இருக்கக் கடினமாக இருந்தால், விரிப்புகள் அல்லது yoga blocks-ஐ இடுப்பின் கீழ் வைக்கவும்.
இன்று ஒரு ஆசனம் (29) – அமர்ந்த நிலை பர்வதாசனம் (Seated Mountain Pose)
‘பர்வதம்’ என்றால் ‘மலை’. இந்த ஆசனத்தில் உடல் மலை போன்ற அமைப்பில் உள்ளதால் இது பர்வதாசனம் என்று பெயர் பெற்றதாகக் கருதப்படுகிறது. அதோ முக ஸ்வானாசனம் என்கிற ஆசனமும் பர்வதாசனம் என்று அழைக்கப்படுவதுண்டு. அமர்ந்த
இன்று ஒரு ஆசனம் (27) – தண்டாசனம் (Staff Pose)
பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றும் தண்டாசனம் முதுகுத்தண்டை பலப்படுத்தும் அற்புதமான பயிற்சியாகும். ‘தண்டு’ என்றால் ‘கம்பு’ என்றும் ‘முதுகுத்தண்டு’ என்றும் பொருள். தண்டாசனம் முதுகுத்தண்டை பலப்படுத்தும் ஆசனமாகும். இவ்வாசனம் முதுகுத்தண்டை நீட்சியடைய (stretches) வைக்கிறது.
இன்று ஒரு ஆசனம் (26) – அர்த்த மத்ஸ்யேந்திராசனம் (Half Spinal Twist)
வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘அரை’, ‘’மத்ஸ்ய’ என்றால் ‘மீன்’, ‘இந்திர’ என்றால் ‘அரசன்’. ஆக, இது மீன்களின் அரசனின் பாதி நிலை ஆசனம் என்பதாகும். மத்ஸ்யேந்திரர் என்ற யோகியின் பெயரை ஒட்டி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.