உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (19) – தனுராசனம் (Bow Pose)

நாம் முன்னர் நின்ற தனுராசனம் பற்றிப் பார்த்திருக்கிறோம். இப்பொழுது நாம் பார்க்க இருப்பது, பிடிலாசனத்தின் மாற்று ஆசனமான தனுராசனம். இதை படுத்த நிலையில் செய்ய வேண்டும். நின்ற தனுராசனம் போலவே தனுராசனத்தை பயிற்சி செய்வதன் மூலம் முதுகுத் தண்டின் ஆரோக்கியத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் பாதுகாக்கலாம். தனுராசனம் ஆங்கிலத்தில் Bow Pose என்று அழைக்கப்படுகிறது. 

Bow Pose

தனுராசனத்தின் மேலும் சில பலன்கள்
  • நுரையீரலை பலப்படுத்தி மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
  • வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்கிறது.
  • வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
  • சீரணத்தை பலப்படுத்துகிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது.
  • நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது.
  • முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது.
  • சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • கூன் முதுகை நிமிர்த்த உதவுகிறது.
  • சிறுநீரகத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
  • உடல், மனச் சோர்வைப் போக்குகிறது.
செய்முறை
  • விரிப்பில் குப்புறப் படுக்கவும்.
  • கால்களை மடித்து கைகளால் கணுக்கால்களைப் பிடிக்கவும்.
  • கைகளால் கால்களை மேல் நோக்கி உயர்த்தவும்; அதே நேரத்தில், மார்பையும் உயர்த்தவும். உங்கள் அடி வயிற்றுப் பகுதி மட்டுமே தரையில் இருக்க வேண்டும். இப்போது உங்கள் உடல் வில் வடிவத்தில் இருக்கும்.
  • 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் கை, கால்களைத் தளர்த்தி பழைய நிலைக்கு வரவும்.
குறிப்பு

கால்களைத் தூக்க முடியவில்லை என்றால், தொடைகளுக்கு அடியில் தலையணை அல்லது yoga block-ஐ வைத்து பயிலவும்.

கழுத்து, தோள், முதுகு, மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் பயில்வதைத் தவிர்க்கவும். குடலிறக்கம் உள்ளவர்களும் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.

இன்று ஒரு ஆசனம் (18) – பிடிலாசனம் (Cow Pose)

இந்த ஆசனம் பூனை நிலைக்கு மாற்று ஆசனமாகும். ‘பிடிலா’ என்றால் ‘பசு’ என்று அர்த்தம். இந்த நிலையில் இருப்பது ஒரு மாட்டின் உடலமைப்பை ஒத்து இருக்கும். பூனை / மாடு நிலை (cat /

Read More »

இன்று ஒரு ஆசனம் (17) – மர்ஜரியாசனம் (Cat Pose)

வட மொழியில் மர்ஜரி என்றால் பூனை என்று பொருள். அதாவது பூனை, உடலை நீட்டி சோம்பல் முறுக்குவது போன்ற நிலை இந்த நிலை. எளிதாக இருந்தாலும் இதன் நன்மைகள் பெரியவை. உடலையும் மனதையும் சமநிலைப்படுத்தும்.

Read More »
Seated Forward Bend

இன்று ஒரு ஆசனம் (16) – பஸ்சிமோத்தானாசனம் (Seated Forward Bend)

பஸ்சிமோத்தானாசனம் என்னும் ஆசனத்தை புஜங்காசனம், சலம்ப புஜங்காசனம் இரண்டுக்கும் மாற்றாகச் செய்யலாம். ‘பஸ்சிமா’ என்றால் வடமொழியில் ‘மேற்கு’ என்று பொருள். ‘உத்தனா’ என்றால் ‘மிகுவாக நீளுதல்’ (intensive stretching) என்று பொருள். பின் உடலைக்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்