உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (13) – புஜங்காசனம் (Cobra Pose)

முகம் கீழ் நோக்கிய நாய் நிலைக்கு, அதாவது அதோ முக ஸ்வானாசனத்துக்கு, புஜங்காசனம் மாற்று ஆசனமாகும்.

‘புஜங்க’ என்றால் வடமொழியில் ‘பாம்பு’ என்று பொருள். ‘ஆசனம்’ என்பது ‘நிலை’, அதாவது பாம்பு நிலை, அதாவது, பாம்பு படமெடுத்து நிற்கும் நிலை ஆகும். பாம்பு இரண்டு சூழ்நிலைகளில் படமெடுத்து நிற்கும். ஒன்று கோபப்பட்டுத் தாக்கத் தயார் ஆகும் போது; அடுத்து, இனச்சேர்க்கையில் ஈடுபடும்போது. இரண்டிலும் மிக உயரமாகப் படமெடுக்கும். அதன் உடலை மூன்றாகப் பிரித்தால், மூன்றாம் பகுதி வரை உடலை உயர்த்தி நிற்கிறது.

Cloaca என்பது பாம்பு, பறவை போன்ற விலங்குகளின் சீரண உறுப்புக்கு கீழ் குடல், பிறப்புறுப்பு, சிறுநீர் குழாய் ஆகியவற்றின் கழிவுகள் வெளியேறும் குழியாகும். Cloaca எனப்படும் அந்தப் பகுதி வரை பாம்பு உடலை உயர்த்தி நிற்கிறது. இந்த ஆசனத்தைப் பார்த்தால் சீரண உறுப்புக்கு கீழ்ப்பகுதி வரை தரையில் இருக்கும். அதன் மேல் உடல் உயர்ந்து இருக்கும்.

இந்த நிலையில் நிற்கும்போது முதுகுத்தண்டு வளைந்து அதன் வால் பகுதி வரை இழுக்கப்படுவதால், முதுகுத்தண்டு பலமாகிறது. அதனால் நரம்புகள் உறுதியாகின்றன. முதுகு வளைவதோடு, முன் பக்கம் வயிற்றுக்குக் கீழ் வரை இழுக்கப்படுகிறது. அதனால் வயிறும், குடல் இயக்கமும் சீராகின்றன. பிறப்புறுப்பு பிரச்சினை சரியாகிறது. சிறுநீர்ப்பையின் இயக்கம் சீராகிறது.

முக்கியமாக இந்த நிலையில் நிற்கும்போதுதான் பாம்பிற்குத் தாக்குவதற்கான பலம் கிடைக்கிறது. அப்படி ஒரு பலத்தை உடலுக்கு இவ்வாசனம் தருகிறது.

மேலும் ‘புஜம்’ என்றால் ‘தோள்’ என்பதே பொதுவான பொருள். இவ்வாசனத்தில் மேலுடலை இரு கைகளால் தாங்கி நிற்பதால் மணிக்கட்டு, முழங்கை, தோள் பகுதிகள் பலமடைகின்றன. கழுத்தும் பலமடைகிறது.

Cobra Pose

resistance bands
புஜங்காசனத்தின் மேலும் சில பலன்கள்

மேற்கூறிய பலன்கள் மட்டுமல்லாமல், புஜங்காசனம் செய்வதால்,

  • நோய் எதிர்ப்புத் திறன் வளர்கிறது.
  • நுரையீரலைப் பலப்படுத்தி ஆஸ்துமா போன்ற கோளாறுகளைத் தவிர்க்க உதவுகிறது.
  • கழுத்து மற்றும் தோள்களின் வலியைப் போக்குகிறது.
  • வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைப்பதால் தொப்பையைக் கரைக்கும் ஆசனங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
  • மாதவிடாய் கோளாறுகளைப் போக்க உதவுகிறது.
  • மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது.
  • உடல் சோர்வைப் போக்குகிறது
yoga gear
செய்முறை

புஜங்காசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • விரிப்பில் குப்புறப் படுக்கவும்.  உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் தரையில் வைக்கவும்.
  • மூச்சை உள்ளிழுத்தவாறே இடுப்பு வரை உடலை உயர்த்தவும். இப்பொழுது, உங்கள் கைகள் வளையாமல்  நேராக இருக்கும்.
  • தோள்களைப் பின்தள்ளி மார்பை விரிக்கவும்.
  • நேராகப் பார்க்கவும் அல்லது முகத்தை மேல் நோக்கி உயர்த்தவும்.
  • 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், உடலை தளர்த்தி தரையில் வைத்து பழைய நிலைக்கு வரவும்.
குறிப்பு

உயர் இரத்த அழுத்தம், குடலிறக்கம், வயிற்று புண் உள்ளவர்கள் புஜங்காசனத்தைத் தவிர்ப்பது நல்லது. மணிக்கட்டில் தீவிர வலி உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

நன்றி: மிக்க அனுபவம் நிறைந்த ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் திரு. பக்தா அவர்களுக்கு.

இன்று ஒரு ஆசனம் (15) – சலம்ப புஜங்காசனம் (Sphinx Pose)

பாலாசனத்துக்கு மாற்று சலம்ப புஜங்காசனம்  ஆகும். பாலாசனம் என்பது குழந்தை குப்புறப் படுத்த நிலை என்று பார்த்தோம். சலம்ப புஜங்காசனம் என்பது முழங்கைகளைத் தரையில் தாங்கி மேலுடலை உயர்த்துவது. புஜங்காசனத்தை பாதி நிலையில் செய்வது

Read More »

இன்று ஒரு ஆசனம் (14) – பாலாசனம் (Child Pose)

ஒரு குழந்தை கால்களை மடக்கிய நிலையில் குப்புறப்படுத்திருக்கும் நிலையே பாலாசனம். பாலா என்றால் குழந்தை ஆகும். ஏன் குழந்தை குப்புறப்படுக்கிறது? ஆறு அல்லது ஏழாம் மாதத்தில் குழந்தை குப்புற கவிழ்கிறது. அதன் பின் அப்படியே

Read More »

இன்று ஒரு ஆசனம் (12) – அதோ முக ஸ்வானாசனம் (Downward Facing Dog)

வஜ்ஜிராசனத்துக்கு மாற்றாக அதோ முக ஸ்வானாசனம் செய்யப்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் Downward Facing Dog என்று பெயர். சரியாக சொன்னால், அதோ என்றால் downward – கீழ் நோக்கி முக என்றால் face –

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்