பின் வளையும் ஆசனங்களில் இன்று நாம் செய்யவிருப்பது பிறையாசனம். இந்த நிலையில் உடல் பிறை வடிவத்தில் காணப்படும். இந்த ஆசனம் இடுப்புக்கு வலிமையையும், வனப்பையும் அளிக்கக் கூடிய ஆசனமாகும். பாதஹஸ்தாசனத்திற்கு இதை மாற்றாக செய்யலாம். பாதஹஸ்தாசனத்தில் பாதங்களுக்குக் கீழ் வைக்கப்படுவதால் கைகள் இழுக்கப்படுவது பிறையாசனத்தில் கைகளை உயர்த்தி வளைவதால் தளர்த்தப்படுகிறது. கைகளை நேராக உயர்த்தி வளையும் போது தோள்பட்டை முதல் விரல் வரை கைகளின் உள்பக்கம் இழுக்கப்படுகிறது. உடலில் முக்கியமான இயக்கங்களான இருதயம், நுரையீரல் இரண்டுக்கும் சக்தி அளிக்கக்கூடிய ஓட்டப்பாதைகள் கைகளின் உள்பக்கமாகவே செல்கின்றன. அவை இழுக்கப்பட்டு சக்தி ஓட்டப்பாதை சீராகிறது. அதனால், இருதயமும், நுரையீரலும் அதிக சக்தியைப் பெற்று நன்றாக இயங்குகின்றன; இருதயமும் நுரையீரலும் பலமடைகின்றன.
பிறை என்பது அடுத்தடுத்து முழு நிலவுக்கான தொடக்கம். உடலை முழு ஆரோக்கியத்தை நோக்கி இவ்வாசனம் நகர்த்துவதால் பிறையாசனம் ஆகிறது.
பாதஹஸ்தாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
பிறையாசனத்தின் பலன்கள்
மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி பிறையாசனம், இருதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகளைச் செம்மையாக்குகிறது. மேலும்,
- இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது.
- சுவாச மண்டல இயக்கத்தை மேம்படுத்துகிறது.
- முதுகின் வளையும் தன்மையை ஊக்குவிக்கிறது.
- முதுகுத்தண்டைப் பலப்படுத்துகிறது.
- இடுப்பைப் பலப்படுத்துகிறது.
செய்முறை
பிறையாசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
- பாதங்களுக்கு இடையில் சிறிது இடைவெளி விட்டு விரிப்பில் நேராக நிற்கவும்.
- கைகளை மேலே உயர்த்தவும்.
- மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே முதுகை பின்னோக்கி வளைக்கவும்; கைகளையும் சேர்த்து பின்னால் எடுத்து செல்லவும். கைகளின் மேற்புறம் காதுகளுக்கு அருகில் இருக்க வேண்டும்.
- உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி இருக்க வேண்டும்.
- 20 வினாடிகள் சாதாரண மூச்சில் இந்த நிலையில் இருந்த பின், மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு வரவும்.
குறிப்பு
முடிந்த அளவு பின்னால் வளைந்தால் போதுமானது.
தீவிர கழுத்து பிரச்சினை மற்றும் தோள் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.
இன்று ஒரு ஆசனம் (11) – வச்சிராசனம் / வஜ்ஜிராசனம் (Thunderbolt Pose)
நின்றது போதும். சற்று உட்காருவோம். அதாவது, உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள் சிலவற்றை இனி செய்வோம். ஏற்கனவே அமர்ந்து செய்யும் ஒரு ஆசனத்தை நாம் பார்த்துள்ளோம். ஆம், பத்மாசனம்தான். பத்மாசனத்தை போலவே ஒரு சிறப்பு வாய்ந்த
இன்று ஒரு ஆசனம் (10) – நின்ற தனுராசனம் (Standing Bow Pose)
இன்று நாம் பார்க்கவிருப்பது நின்ற தனுராசனம். இதை ப்ரசாரித பாதோத்தானாசனத்திற்கு மாற்று ஆசனமாகச் செய்யலாம். தனுராசனம் என்றால் வில் நிலை ஆகும். இதை குப்புறப்படுத்தும் செய்யலாம். நின்ற நிலையிலும் செய்யலாம். இவ்வாசனத்தின் பலன்கள் நம்மை
இன்று ஒரு ஆசனம் (8) – அர்த்த சக்ராசனம் (Half-Wheel Pose)
நின்று பின்வளையும் ஆசனங்களின் வரிசையில் இன்று நாம் செய்யவிருப்பது அர்த்த சக்ராசனம், அதாவது பாதி சக்கர நிலை. இது ஆங்கிலத்தில் Half-Wheel Pose என்று அழைக்கப்படுகிறது. இதை பாதாங்குஸ்தாசனத்துக்கு (Big Toe Pose) மாற்றாக செய்யலாம்.