உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (87) – மகராசனம் (Crocodile Pose)

குப்புறப் படுத்த நிலையில் ஓய்வாசனம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஆம், இன்று நாம் பார்க்கப் போகும் மகராசனம் குப்புறப் படுத்த நிலையில் உடலுக்கு ஓய்வு தருவதுதான். வடமொழியில் ‘மகர’ என்பது முதலையைக் குறிக்கும் சொல்லாகும். மகராசன நிலை முதலையைப் போன்று இருந்தாலும், இவ்வாசனத்தில் உதரவிதான சுவாசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது; இது முதலை மூச்சு விடுவதை ஒட்டி இருப்பதாலும் மகராசனம் என்ற பெயர் பொருத்தமாகிறது.

உதரவிதான சுவாசம் செய்யும் போது உதரவிதானம், வயிறு மற்றும் வயிற்று தசைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கும்போதும், உதரவிதானம் கீழ் நோக்கி இழுக்கப்படுவதால், நுரையீரல்களின் செயல்பாடு சிறக்கிறது.

மகராசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் சகஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக ஆற்றல் அதிகரிக்கிறது, படைப்புத் திறன் அதிகரிக்கிறது, உறவுகள் பலப்படுகின்றன. சகஸ்ரார சக்கரம் தூண்டப்படுவதால் தன்னை உணரும் தன்மை வளர்கிறது; பிரபஞ்ச ஆற்றலோடு இணைதல் சாத்தியப்படுகிறது.

மகராசனத்தின் மேலும் சில பலன்கள்
  • நுரையீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது
  • உடல் முழுமைக்கும் நல்ல ஓய்வளிக்கிறது
  • முதுகு வலியைப் போக்குகிறது
  • தோற்றப்பாங்கை சரி செய்கிறது
  • தூக்கமின்மையை சரி செய்கிறது
  • இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
  • இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது
  • சீரணத்தை சரி செய்கிறது
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது
செய்முறை
  • விரிப்பில் குப்புறப் படுக்கவும்.
  • கண்களை மூடிக் கொள்ளவும். கைகளை மடித்துத் தலைக்கடியில் வைக்கவும். தலையை கையின் மீது வைக்கவும்.
  • கால்களைச் சற்று விலக்கித் தளர்வாக இருக்குமாறு வைக்கவும்.
  • சாதாரண மூச்சில் 20 முதல் 30 வினாடிகள் இருக்கவும்.
குறிப்பு

கர்ப்பிணிப் பெண்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.

குப்புறப் படுக்க இயலாதவர்கள், நிமிர்ந்து படுத்து கால்களை சுமார் 90 degree அளவு உயர்த்தி சுவற்றின் மீது வைத்து, கைகளை வணக்கம் சொல்லும் முறையில் மார்பின் மீது வைத்துப் பழகவும்.

இன்று ஒரு ஆசனம் (88) – சதுஷ் பாதாசனம் (Four-Footed Pose)

இதற்கு முன் நாம் பார்த்த சேதுபந்தாசனம் என்கிற ஆசனத்தின் ஒரு மாற்று முறைதான் சதுஷ் பாதாசனம். வடமொழியில் ‘சதுஷ்’ என்பதற்கு ‘நான்கு’ என்றும் ‘பாத’ என்பதற்கு ‘பாதம்’ என்றும் ‘கால்’ என்றும் பொருள். இவ்வாசனம்

Read More »

இன்று ஒரு ஆசனம் (86) – சலபாசனம் (Locust Pose / Grasshopper Pose)

குப்புறப் படுத்து செய்யும் ஆசனங்களில் ஒன்றான சலபாசனம் அற்புதமான பலன்களைத் தரக்கூடியதாகும். வடமொழியில் ‘சலப’ என்றால் ‘வெட்டுக்கிளி’ என்று பொருள். இது ஆங்கிலத்தில் Locust Pose மற்றும் Grasshopper Pose என்றும் அழைக்கப்படுகிறது. சலபாசனம்,

Read More »

இன்று ஒரு ஆசனம் (85) – சுப்த பாதாங்குஸ்தாசனம் (Reclining Hand-to-Big Toe Pose)

நம் முந்தைய பதிவுகளில் பாதாங்குஸ்தாசனம் மற்றும் உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது சுப்த பாதாங்குஸ்தாசனம். வடமொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’, ‘பாத’ என்றால் ‘கால்’ மற்றும் ‘அங்குஸ்தா’ என்றால்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்