நின்று செய்யும் ஆசனங்களில் விருஷாசனம் போன்றே ஒற்றைக் காலில் நின்று செய்யப்படுவது கருடாசனம். வடமொழியில் ‘கருட’ என்றால் ‘கருடன்’ அல்லது ‘கழுகு’ என்று பொருள். கருடாசனம் ஆங்கிலத்தில் Eagle Pose என்று அழைக்கப்படுகிறது.
விருஷாசனம் பற்றி படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
கருடாசனம் என்ற ஆசனத்தின் பெயருக்குப் பின்னால் இருப்பது வெறும் கழுகு அல்ல; அதன் குணாம்சங்களே. கழுகு பயமில்லாதது; எதையும் எதிர் கொள்ளும் துணிவு கொண்டது. தன் இரை எவ்வளவு பெரிதாக, வலியதாக இருந்தாலும் பின்வாங்காமல் உறுதியாக முன்னேறும் தன்மை கொண்டது கழுகு. இது பலம் மற்றும் சுதந்திரத்தின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது.
கருடாசனம் ஆக்ஞை சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. Third Eye Chakra என்றும் Ajna Chakra என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆக்ஞை சக்க்ரம் மிகவும் வலிமை வாய்ந்ததாகும். ஆக்ஞை சக்கரம் சீராக இயங்கினால் உயர்ந்த எண்ணங்கள் வளர்கிறது. உள்ளுணரும் ஆற்றல் வளர்கிறது. இது ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்ப்பதோடு, எதிர்மறை எண்ணங்களைப் போக்கவும் செய்கிறது.
கருடாசனத்தின் மேலும் சில பலன்கள்
- மூச்சுக் கோளாறுகளைப் போக்குகிறது
- நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது
- கால் தசைகளை உறுதியாக்குகிறது
- மூட்டுக்களை வலுவாக்குகிறது
- உடம்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
- உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது
- இடுப்பை பலப்படுத்துகிறது
- அடி முதுகு வலியைப் போக்குகிறது
- சையாடிக் வலியைப் போக்குகிறது
செய்முறை
- தாடாசனத்தில் நிற்கவும்.
- வலது கையை நெஞ்சுக்கு நேராக உயர்த்தி கை முட்டியை மடக்கவும்.
- இடது கையை வலது கைக்கு அடியில் கொண்டு வந்து அதனை வளைத்து, இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைக்கவும்.
- இடது கால் முட்டியைச் சற்று வளைக்கவும்.
- வலது காலை உயர்த்தி இடது காலின் மேல் வைக்கவும். அதாவது, வலது தொடை இடது தொடையின் மீது இருக்க வேண்டும்.
- வலது பாதத்தை இடது காலைச் சுற்றி கொண்டு வரவும்.
- 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.
- கால் மற்றும் கை மாற்றி மீண்டும் செய்யவும்.
குறிப்பு
தீவிர முட்டி அல்லது மூட்டுப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
ஒற்றைக் காலில் நிற்பது கடினமாக இருந்தால் சுவரை ஒட்டி நின்று பயிலவும்.
இன்று ஒரு ஆசனம் (64) – சக்ராசனம் (Wheel Pose)
பின் வளைந்து செய்யும் ஆசனங்களில் சவாலான ஆசனம் சக்ராசனம். இதன் பெயரிலேயே புரிந்திருக்கும், இவ்வாசனத்தில் உடல் சக்கரமாக வளைந்திருக்கும் என்று. இவ்வாசனம் ஆங்கிலத்தில் Wheel Pose என்று அழைக்கப்படுகிறது. சக்ராசனம் உடலில் உள்ள முக்கியமான
இன்று ஒரு ஆசனம் (62) – உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் (Extended Hand to Big Toe Pose)
முந்தைய பதிவுகளில் ஒன்றில் நாம் பாதாங்குஸ்தாசனம் பற்றிப் பார்த்திருக்கிறோம். நின்று செய்யும் அந்த ஆசனத்தில் நாம் முன்னால் குனிந்து கால் பெருவிரல்களைப் பிடிப்போம். இன்று நாம் பார்க்கவிருக்கும் உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனத்தில் நாம் நின்றவாறு
இன்று ஒரு ஆசனம் (61) – விருக்ஷாசனம் (Tree Pose)
வடமொழியில் ‘விருஷ’ என்றால் மரம். உடலை ஒற்றைக் காலில் தாங்கி நிற்கும் இவ்வாசனத்தைப் பயில்வதால் நம் மனமும் உடலும் சமநிலையை அடைவதால் இது விருஷாசனம் என்ற பெயர் பெற்றது. இவ்வாசனம் ஆங்கிலத்தில் Tree Pose