முந்தைய பதிவு ஒன்றில், அமிலப் பின்னோட்டத்தைச் தீர்க்க உதவும் ஆசனங்கள் பற்றிப் பார்த்திருந்தோம். இன்று, ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்று ஆங்கிலத்தில் அறியப்படுகிற அமிலப் பின்னோட்டத்தைச் சரி செய்ய உதவும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம்.
முத்திரை பயிற்சி எவ்வாறு அமிலப் பின்னோட்டத்தைப் போக்க உதவுகிறது
குறிப்பிட்ட முத்திரைகளைப் பழகுவதால், அசீரணக் கோளாறு நீங்குகிறது. உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறுகின்றன. முத்திரைகளைப் பழகுவது மனதை அமைதிப்படுத்துவதால் மன அழுத்தத்தினால் ஏற்படும் அமிலப் பின்னோட்டம் சரி செய்யப்படுகிறது.
அமிலப் பின்னோட்டத்தைப் போக்க உதவும் முத்திரைகள்
அமிலப் பின்னோட்டம் ஏற்படுத்தும் தாக்கத்தைச் சரி செய்யவும், அமிலப் பின்னோட்டத்தை இயற்கையான முறையில் தீர்க்கவும் கீழ்க்கண்ட முத்திரைகளைப் பயில்வது உதவியாக இருக்கும்.
1) சுரபி முத்திரை
செய்முறை
- இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும்.
- இடது கையின் சிறுவிரல் நுனியை வலது கை மோதிர விரல் நுனியோடு சேர்த்து வைக்கவும்.
- வலது கை சிறுவிரல் நுனியை இடது கை மோதிர விரலோடு சேர்த்து வைக்கவும்.
- இடது கை நடு விரல் நுனியை வலது கை சுட்டும் விரல் நுனியோடு சேர்த்து வைக்கவும்.
- வலது கை நடு விரல் நுனியை இடது கை சுட்டும் விரல் நுனியோடு சேர்த்து வைக்கவும்.
சூரிய உதயம் அல்லது சூரிய அத்தமன நேரத்தில் 15 முதல் 45 நிமிடங்கள் வரை பயிலும் போது பலன்கள் கூடுதலாகக் கிடைக்கும்.
2) அபான முத்திரை
15 முதல் 30 நிமிடங்கள் வரை அபான முத்திரையில் இருக்கவும்.
3) அபானவாயு முத்திரை
வேளைக்கு 15 நிமிடம் என ஒரு நாளைக்கு இரு வேளை இம்முத்திரையைப் பயிலவும்.
4) பிருத்வி முத்திரை
செய்முறை
- பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- மோதிர விரல் மற்றும் பெருவிரலின் நுனிகளை ஒன்றாக சேர்த்து வைக்கவும்.
- மீதமுள்ள மூன்று விரல்களையும் நீட்டியவாறு வைக்கவும்.
- இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் பயிலவும்.
- 30 முதல் 45 நிமிடங்கள் வரை இம்முத்திரையில் இருக்கவும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள, அமிலப் பின்னோட்டத்தைப் போக்க உதவும் 4 முத்திரைகளைத் தொடர்ந்து பழகி வர, செரிமானம் மேம்பட்டு நலமாக வாழலாம்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.