தற்காலத்திய வேலை மற்றும் வாழ்க்கை முறையால் ஏற்படும் பல பாதிப்புகளில் ஒன்று சீரற்ற மாதவிடாய். சமீப வருடங்களில் இப்பிரச்சினை அதிகரித்துள்ளதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. சீரற்ற மாதவிடாயை இயற்கையான முறையில், யோகாசனப் பயிற்சியின் மூலம் ஒழுங்குபடுத்த முடியும். இன்று, சீரற்ற மாதவிடாயை சரி செய்யும் 9 அற்புத ஆசனங்கள் குறித்து பார்க்கலாம்.
சீரற்ற மாதவிடாய் என்றால் என்ன?
பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். ஒரு சில நாட்கள் முன் அல்லது பின், அதாவது 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவது இயல்பானதாகும். அவ்வாறில்லாமல், கீழ்க்கண்ட வகைகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டால் அது சீரற்ற மாதவிடாயாகக் கருதப்படும்.
சீரற்ற மாதவிடாய்க்கான அறிகுறிகள்
- மாதவிடாய் ஏற்படும் காலம் ஒரே சீராக இல்லாமல் ஒவ்வொரு முறையும் நீண்ட நாள்கணக்கு வித்தியாசத்தில் முன்பாகவோ பின்பாகவோ ஏற்படுதல்.
- 21 நாட்களுக்கு முன்பாகவோ 35 நாட்களுக்குப் பின்னரோ மாதவிடாய் ஏற்படுதல்.
- மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மாதங்களுக்கு மாதவிடாய் உண்டாகாமல் இருத்தல்.
- வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமான அல்லது மிகக் குறைவான உதிரப்போக்கு ஏற்படுதல்
சீரற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
சீரற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணங்களில் சில:
- ஹார்மோன் கோளாறுகள்
- தைராய்டு இயக்கம் சீராக இல்லாமை
- சினைப்பை நோய்க்குறி (PCOS)
- கர்ப்பப்பை கோளாறுகள்
- அதீத உடற்பயிற்சி
- சத்தான ஆகாரம் உண்ணாமை
- அதிக அல்லது குறைவான உடல் எடை
- மன அழுத்தம்
- மாதவிலக்கு நிற்கும் காலம் (menopause)
- சில வகையான மருந்துகள்
- சில உடல் நலக் கோளாறுகள்
யோகா எப்படி சீரற்ற மாதவிடாயை சரி செய்கிறது?
மாதவிடாய் சீரற்று இருப்பதற்கான காரணங்கள் யோகா மூலம் களையப்படுகின்றன.
யோகப் பயிற்சி செய்வதனால் தைராய்டு குறைபாடுகள் நீங்குவதாக ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது.
தொடர்ந்து குறிப்பிட்ட யோகாசனங்கள் செய்வதன் மூலம் சினைப்பை நோய்க்குறி (PCOS) குணமாவதாக ஆய்வு அறிவிக்கிறது.
அதிக உடல் எடை குறைப்பிற்கு யோகா உதவுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
தொடர்ந்து யோகாசனம் பயில்வதால் மன அழுத்தம் நீங்குவதும் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
சீரற்ற மாதவிடாயை சரி செய்யும் 9 அற்புத ஆசனங்கள்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்கள் மாதவிடாயை சீர் செய்வதோடு உடல் நலத்தையும் மேம்படுத்துகின்றன.
1) மாலாசனம்
மாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) உஸ்ட்ராசனம்
உஸ்ட்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) புஜங்காசனம்
புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) தனுராசனம்
தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) அதோ முக ஸ்வானாசனம்
அதோ முக ஸ்வானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) பத்த கோணாசனம்
பத்த கோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) சுப்த வஜ்ஜிராசனம்
சுப்த வஜ்ஜிராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
8) மத்ஸ்யாசனம்
மத்ஸ்யேந்திராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
9) விபரீதகரணீ
விபரீதகரணீ பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
மேற்கூறப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர மாதவிடாய் சீராக இருக்கும்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.
மூட்டழற்சிக்கான 14 ஆசனங்கள்
உலக அளவில் மூட்டழற்சியால் (ஆர்த்ரைட்டீஸ்) பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப வருடங்களில் அதிகரித்திருக்கிறதாக பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் ஆய்வுகள் கூறுகின்றன. மூட்டழற்சியின் வடிவங்கள் நூறுக்கும் மேற்பட்டவை. மூட்டழற்சிக்கான முழுமையான
அமிலப் பின்னோட்ட நோய் (ஆசிட் ரிஃப்ளெக்ஸ்) தீர்க்கும் ஆசனங்கள்
அமிலப் பின்னோட்ட நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப வருடங்களில் மிக அதிகமாகி வந்திருக்கிறது. நோர்வேயில் எடுக்கப்பட்ட நீண்ட கால ஆய்வின் மூலம் அமிலப் பின்னோட்ட நோய் பத்து
இருதய நலனைப் பாதுகாக்கும் 16 ஆசனங்கள்
யோகாசனம் பயில்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் உலகளவில் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறான ஆய்வுகள் மூலம் இருதய நலனைப் பாதுகாக்க யோகப்பயிற்சி உதவுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று