உடல் மன ஆரோக்கியம்

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் 7 அற்புதமான ஆசனங்கள்

உலகளவில் மக்கள் சந்தித்து வரும் உடல், மன நலப் பிரச்சினைகளில் , தலைமுடி இழப்பும் முக்கிய இடம் பெறுகிறது. பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளின்படி, ஆண்களில் இளம் வழுக்கை உள்ளவர்களின் எண்ணிக்கை சமீப வருடங்களில் கூடியிருப்பது தெரிய வருகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு காரணங்களால் தலைமுடி உதிர்வு சமீப வருடங்களில் அதிகமாகி இருப்பதையும் அறிய முடிகிறது. தலைமுடி உதிர்தலுக்கான காரணங்கள் மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ஆசனங்கள் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம். 

தலைமுடி உதிர்வுக்கான காரணங்கள்

நாளொன்றுக்கு 50 முதல் 100 முடி வரை உதிர்வது இயற்கையானது. ஆனால், தலைமுடியின் அடர்த்தி குறையும் அளவிற்குச் செல்லும் போது அதுவே தலைமுடி இழப்பு என்று கருதப்படுகிறது. 

தலைமுடி உதிர்வுக்கான காரணங்களில் சில:

  • ஊட்டச்சத்து குறைபாடு
  • தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் கோளாறுகள்
  • மரபியல் (genetics)
  • உச்சந்தலைப் பகுதியில் ஏற்படும் நோய்த் தொற்றுகள்
  • தன்னுடல் தாக்கு நோய் (autoimmune disorder)
  • மன அழுத்தம்
  • சில வகையான மருந்து மற்றும் சிகிச்சைகள்
யோகா எப்படி தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது?

இயற்கையான முறையில் தலைமுடி இழப்பை சரி செய்யவும் தலைமுடி வளர்ச்சியைத் தூண்டவும் யோகப்பயிற்சி பெருமளவில் உதவுகிறது.

தலைமுடி உதிர்வுக்கான காரணங்கள் பலவற்றையும் யோகப்பயிற்சி நீக்குவதால் தலைமுடி இழப்பு சரியாவதோடு தலைமுடி வளர்ச்சியும் சிறப்பாக நடைபெறுகிறது. 

தொடர்ந்து யோகாசனங்களைப் பழகும் போது ஹார்மோன் கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன.

தன்னுடல் தாக்கு நோய் அறிகுறிகளைப் போக்க ஆசனங்கள் உதவுவதாகப் பல்வேறு ஆய்வு முடிவுகளும் அறிவிக்கின்றன.

குறிப்பிட்ட ஆசனங்கள் தலைமுடிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடியை ஊட்டமாக்கி தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

யோகாசனம் பயில்வதால் மன அழுத்தம் நீங்கி மனம் அமைதி பெறுகிறது. எனவே மன அழுத்தம் காரணமாக ஏற்படும் தலைமுடி உதிர்வுக்கு யோகா சிறந்த இயற்கை நிவாரணியாகத் திகழ்கிறது என்பது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள் பற்றி பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

https://www.herbspro.com/collections/vitamins-supplements
தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் யோகாசனங்கள்

தலைமுடி உதிர்வை இயற்கை முறையில் போக்கி அடர்த்தியான  கூந்தலைப் பெற உதவும் ஆசனங்களில் சில:

1) உத்தானாசனம்

Standing Forward Bend

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ஆசனமான உத்தானாசனத்தின் செய்முறையையும் மற்ற பலன்களையும் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) அதோ முக ஸ்வானாசனம்

Downward Facing Dog Pose

மன அழுத்தத்தைப் போக்கவும் தலைப்பகுதிக்கு அதிக இரத்த ஓட்டத்தை செலுத்தி ஆரோக்கியமான கூந்தலைப் பெறவும் உதவும் அதோ முக ஸ்வானாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

3) வஜ்ஜிராசனம்

Thunderbolt Pose

செரிமானக் கோளாறுகளால் தலைமுடி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்தை உடல் கிரகிக்காமல் போகும் வாய்ப்புண்டு. வஜ்ஜிராசனம் பழகுவதால் செரிமானக் கோளாறுகள் சரி செய்யப்படுகிறது. வஜ்ஜிராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) பாலாசனம்

Child Pose

பாலாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) சர்வாங்காசனம்

Shoulder Stand

ஆசனங்களின் அரசியான சர்வாங்காசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) மத்ஸ்யாசனம்

Fish Pose

இயற்கையான முறையில் தலைமுடி உதிர்வைத் தடுக்கும் ஆசனங்களில் ஒன்றான மத்ஸ்யாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

7) விபரீதகரணீ

Legs Up the Wall Pose

விபரீதகரணீயின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

தலைமுடி உதிர்வைப் போக்கி இயற்கையான முறையில் தலைமுடி வளர்ச்சி பெற உதவும் ஆசனங்களைத் தொடர்ந்து செய்வதோடு சத்தான உணவுகளை உட்கொண்டால் மிக விரைவில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். 

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

மறிமான் / Antelope

அசப்பில் மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான், மான் வகைகளிலிருந்து வேறுபட்டது. உலகில் 91 வகை மறிமான்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 91 வகைகளில் 25 அழிவின் விளிம்பில் இருப்பதாக IUCN அறிவித்துள்ளது.  மறிமான்

Read More »

தாய் சீயின் அற்புத பலன்கள்

பண்டைய சீனாவில் தோன்றிய தாய் சீ ஒரு அற்புதமான உடல்-மன பயிற்சியாகும்.  இது இயக்கத்தோடு கூடிய தியானம் (Moving meditation) என்றும் அழைக்கப்படுகிறது. தாய் சீ, சண்டைக் கலையாகத் தோன்றி, காலங்கள் செல்லச் செல்ல

Read More »
Sandhi Mudra

மூட்டழற்சியைப் போக்க உதவும் முத்திரைகள்

மூட்டழற்சியின் முக்கிய வடிவங்கள், மூட்டழற்சிக்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்த தகவல்களையும் மூட்டழற்சியைப் போக்க உதவும் 14 ஆசனங்கள் பற்றியும் முந்தைய பதிவு ஒன்றில் பார்த்திருந்தோம். மூட்டழற்சியைப் போக்க உதவும் முத்திரைகள் குறித்து இன்று

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்