இருதய நோய்களின் தாக்கம் அதிகமாகி வரும் சமூக சூழலை நாம் பார்க்கிறோம். இருதய நோய்களைத் தவிர்த்தலில் முத்திரைகளின் பங்கு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இருதய நோயாளிகளுக்கு முத்திரைகள் பேருதவி புரிவதாய் தெரிய வந்துள்ளது. இருதய நலன் காக்கும் அற்புத முத்திரைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
இருதய நலன் காக்கும் 16 முக்கிய ஆசனங்கள் என்கிற எங்களின் முந்தைய பதிவைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இருதய நலனை பாதுகாக்கும் முக்கிய முத்திரைகள்
உடல், மன நலனை மேம்படுத்துவதில் முத்திரைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருதய நலனைப் பேண பயில வேண்டிய முக்கியமான முத்திரைகள் இதோ:
1) அபான முத்திரை
15 நிமிடங்கள் வரை அபான முத்திரையைப் பயிலவும்.
2) அபானவாயு முத்திரை
அபானவாயு முத்திரை மற்றும் ஹிருதய முத்திரை என்று அழைக்கப்படும் இம்முத்திரை ‘V’ முத்திரை என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, ஆங்கிலத்தில் victory. இந்த முத்திரையைப் பயில்வதால் உயர் இரத்த அழுத்தம் சீராவதோடு, இருதய துடிப்பும் மேம்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த ஆய்வின் படி, தீவிர நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட மூவர் இந்த முத்திரையை பழகிய போது நெஞ்சு வலியின் தீவிரம் குறைந்ததாகவும், மருத்துவமனைக்குச் செல்லும் வரை மாரடைப்பு நேராமல் தவிர்த்ததாகவும் தெரிய வருகிறது.
நல்ல உடல்நிலை உள்ளவர்களும் இந்த முத்திரையைப் பழகி வர இருதய நலன் மேம்படும் என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது.
வேளைக்கு 15 நிமிடம் என ஒரு நாளைக்கு இரு வேளை இம்முத்திரையைப் பயிலவும்.
3) பிராண முத்திரை
பிராண முத்திரையை 30 முதல் 45 நிமிடங்கள் வரை பயிலவும். வேளைக்கு 15 நிமிடங்கள் என மூன்று வேளைகளில் பிரித்தும் பயிலலாம்.
4) சூரிய முத்திரை
சூரிய முத்திரையை 45 நிமிடங்கள் வரை பயிலலாம். வேளைக்கு 15 நிமிடங்கள் என மூன்று வேளைகளாகப் பிரித்தும் பயிலலாம்.
5) லிங்க முத்திரை
உடல் எடை குறைப்பிற்கும் சிறந்த பலனைத் தரும் லிங்க முத்திரையை தொடர்ச்சியாக 15 நிமிடங்களுக்கு மட்டுமே பழகலாம்.
6) ஆகாய முத்திரை
15 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை இம்முத்திரையைப் பழகவும்.
7) முஷ்டி முத்திரை
வேளைக்கு 15 நிமிடங்கள் என மூன்று வேளை இம்முத்திரையைப் பயிலலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இருதய நலனைக் காக்கும் 7 அற்புத முத்திரைகளை பிரச்சினை தீரும் வரையில் பழகவும்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.
அசீரணத்தைப் போக்கும் 6 சிறந்த முத்திரைகள்
முந்தைய பதிவொன்றில் அசீரணத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள் குறித்து பார்த்திருந்தோம். இன்றைய பதிவில் அசீரணத்தைப் போக்கும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம். அசீரணத்தைப் போக்கும் முத்திரைகள் செரிமானக் கோளாறுகளைப் போக்கி சீரணத்தை மேம்படுத்தும் முத்திரைகளில்
மலச்சிக்கலைப் போக்கும் முத்திரைகள்
முந்தைய பதிவு ஒன்றில் மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று மலச்சிக்கலைப் போக்கும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம். மலச்சிக்கலைப் போக்கும் முத்திரைகள் மலச்சிக்கலைப் போக்கும் முக்கிய முத்திரைகளில் சில: 1) சூரிய முத்திரை
கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகள்
முந்தைய பதிவு ஒன்றில் கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள் பற்றிப் பார்த்தோம். கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகளில் சிலவற்றைப் பற்றி இன்று பார்க்கலாம். முத்திரைகள் எவ்வாறு கழுத்து வலியைப் போக்குகின்றன? குறிப்பிட்ட முத்திரைகள் கழுத்து