மலச்சிக்கலைப் பற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் கூறியிருந்ததைப் பற்றியும் மலச்சிக்கலுக்கான காரணங்கள் மற்றும் ஆசனங்கள் மூலம் மலச்சிக்கலை சரி செய்வது பற்றியும் மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள் என்ற பதிவில் பார்த்திருக்கிறோம்.
இயற்கையான முறையில் மலச்சிக்கலைப் போக்கும் வழிமுறைகளில் எசன்சியல் எண்ணெய்களின் பயன்பாடும் ஒன்று. மலச்சிக்கலைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்களில் முக்கியமான சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
மலச்சிக்கலைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்
மலச்சிக்கலைத் தீர்க்க உதவும் முக்கிய எசன்சியல் எண்ணெய்களில் சில:
1) Ginger Essential Oil
இஞ்சி எசன்சியல் எண்ணெய் மற்றும் லாவண்டர் எசன்சியல் எண்ணெய் ஆகிய இரண்டையும் வயிற்றில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் நாள்பட்ட மலச்சிக்கல் தீருவதாக ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு அய்ந்து முறை என நான்கு வாரங்களுக்கு, ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்களுக்கு அரோமாதெரபி மசாஜ் செய்யப்பட்டதில் மலம் இளகியும், மலச்சிக்கலின் தீவிரமும் அறிகுறிகளும் குறைந்து போனதாக தெரிய வந்துள்ளது.
2) Lavender Essential Oil
Lavender essential எண்ணெயை மசாஜ் செய்வதனால் மலச்சிக்கல் நீங்குவது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. Lavender எசன்சியல் எண்ணெய்யை காற்றில் பரவச் செய்து மன அழுத்தத்தைப் போக்க உதவுவதன் மூலம், மன அழுத்தத்தால் ஏற்படும் சீரணக் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் சரி செய்யப்படுகின்றன.
3) Peppermint Essential Oil
Peppermint எசன்சியல் எண்ணெய் வயிற்று தசைகளை இளக்கி மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. Peppermint எண்ணெய்யை வயிற்றில் தடவி மசாஜ் செய்யலாம். அல்லது, பரிந்துரைக்கப்பட்ட அளவில் நீர்க்கச் செய்து அருந்தினாலும் மலச்சிக்கலிலிருந்து விடுபடலாம்.
4) Rosemary Essential Oil
மலச்சிக்கலைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் வரிசையில் rosemary எசன்சியல் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. Rosemary எசன்சியல் எண்ணெய்யை வயிற்றில் தடவி மசாஜ் செய்வதால் வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் சீரடைகிறது. இதனால் மலச்சிக்கல், செரியாமை போன்றவை சீராகின்றன. Rosemary எசன்சியல் எண்ணெயின் வாசத்தை அறையில் பரவச் செய்வதன் மூலமாகவும் மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெற முடியும். இந்த எசன்சியல் எண்ணெயின் வாசம் மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது. எனவே, மன அழுத்தத்தால் ஏற்படும் மலச்சிக்கலுக்கு இது நல்ல தீர்வாக அமைகிறது.
5) Lemon Essential Oil
Source: pexels-pixabay-33783
Lemon எசன்சியல் எண்ணெய்யை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தண்ணீர் சேர்த்து நீர்க்கச் செய்து பருகி வந்தால் மலச்சிக்கலிலிருந்து விடுபடலாம். எலுமிச்சை எண்ணெயின் வாசத்தை முகரும் போது மனம் அமைதியடைவதால், பதட்டம், மனத்தளர்ச்சி ஆகியவற்றால் ஏற்படும் மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெறலாம்.
6) Anise Essential Oil
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட மலக்குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome) அறிகுறிகளை Anise எசன்சியல் எண்ணெய் போக்க உதவுவதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
7) Chamomile Essential Oil
சிசேரியனுக்குப் பின் ஏற்படக் கூடிய POI எனப்படும் postoperative ileus-லிருந்து விரைவில் நிவாரணம் பெற chamomile எசன்சியல் எண்ணெய் உதவுவதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. POI என்பது சிசேரியன் போன்ற அறுவை சிகிச்சையின் பின்னால் குடலசைவில் ஏற்படும் மாற்றத்தினால் மலச்சிக்கல், செரியாமை, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளைக் குறிப்பதாகும். Chamomile எசன்சியல் எண்ணெயை வயிற்றில் தடவி மசாஜ் செய்து வர POI-யின் பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைப்பதாக மேற்படி ஆய்வு உறுதி செய்துள்ளது.
எசன்சியல் எண்ணெய்களைப் பயன்படுத்தும் போது நீர்க்கச் செய்யும் விதிகளைப் பின்பற்றுவது அவசியம். உடல் நலக் கோளாறுகள் ஏதேனும் இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்துதல் நல்லது.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.
அசர வைக்கும் மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் நன்மைகள்
முந்தைய பதிவு ஒன்றில் சளி, இருமல் போக்குதல் முதல் புற்று நோய் தவிர்ப்பு வரையிலான மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். மஞ்சள் தரும் நன்மைகள் போலவே மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் பலன்கள் அனைத்தும்
எசன்சியல் எண்ணெய்களை நீர்க்கச் செய்யும் முறை
எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்தே பயன்படுத்த வேண்டும். பொதுவான விதிமுறைகள் இங்கு அளிக்கப்பட்டிருந்தாலும், தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரிலே பயன்படுத்தவும். எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றி
எசன்சியல் எண்ணெயின் பலன்கள்
மருத்துவ குணமிக்க மூலிகைச் செடிகளின் பாகங்களான வேர், தண்டு, இலைகள், மொட்டுகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் எசன்சியல் எண்ணெய். எசன்சியல் எண்ணெயின் பலன்கள் அற்புதமானவை. பொதுவாக எசன்சியல் எண்ணெய் steam distillation,
2 Responses
உபயோகமான பதிவு. நித்தம் தேவைப்படும் எண்ணெய் ஆரோக்யம் தருவதாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான குறிப்புகள் தந்தமைக்கு நன்றி,,🙏
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. தொடர்ந்து எங்கள் பதிவுகளைப் படித்தும் ஊக்கமளித்தும் வருவதற்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🏻