முந்தைய பதிவு ஒன்றில் தூக்கமின்மைக்கான காரணங்கள், தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தூக்கமின்மையைப் போக்கும் ஆசனங்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்த்திருந்தோம். இன்று தூக்கமின்மையைப் போக்கும் முத்திரைகள் பற்றி பார்க்கலாம்.
தூக்கமின்மையைப் போக்கும் முத்திரைகள்
தூக்கமின்மையைப் போக்கும் முக்கிய முத்திரைகளில் சில:
1) பிராண முத்திரை
பிராண முத்திரையின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) ஞான முத்திரை
செய்முறை
- பதுமாசனம், சுகாசனம் அல்லது வஜ்ஜிராசனத்தில் அமரவும்.
- சுட்டும் விரல் மற்றும் பெருவிரல் நுனிகளை சேர்க்கவும்.
- மற்றைய மூன்று விரல்களையும் நீட்டி வைக்கவும்.
- உள்ளங்கைகள் தரையை நோக்கி இருக்க வேண்டும்.
- இந்த முத்திரையில் 15 முதல் 30 நிமிடங்கள் வரை இருக்கவும்.
3) சூன்ய வாயு முத்திரை
செய்முறை
- பதுமாசனம், சுகாசனம் அல்லது வஜ்ஜிராசனத்தில் அமரவும்.
- சுட்டும் விரல் மற்றும் நடு விரலை மடித்து உள்ளங்கையில், பெருவிரலின் கீழ் வைக்கவும்.
- பெருவிரலை மடித்த விரல்கள் மீது மடித்து வைக்கவும்.
- மோதிர விரல் மற்றும் சிறுவிரலை நீட்டியவாறு வைக்கவும்.
- பொதுவாக சூன்ய வாயு முத்திரையில் 15 நிமிடங்கள் இருந்தால் போதுமானது. உடல் நல உபாதைகளுக்காக செய்வதாக இருந்தால் 45 நிமிடங்கள் வரை சூன்ய வாயு முத்திரையைப் பழகவும்.
4) சக்தி முத்திரை
செய்முறை
- சுகாசனம் போன்ற வசதியான ஆசன நிலையில் அமரவும்.
- பெருவிரலை மடித்து அதன் மேல் சுட்டும் விரல் மற்றும் நடுவிரலை வைக்கவும்.
- மோதிர விரலும் சிறு விரலும் நீட்டியபடி இருக்க வேண்டும்.
- இரண்டு கைகளிலும் இது போன்று விரல்களை வைத்து இரண்டு கைகளையும் அருகருகே கொண்டு வரவும்.
- வலது கையின் மோதிர விரல் மற்றும் சிறு விரலின் நுனிகள், இடது கையின் மோதிர விரல் மற்றும் சிறு விரலின் நுனிகளோடு சேருமாறு வைக்கவும்.
- மடித்து வைத்திருக்கும் வலது கை விரல்களும் அவ்வாறே மடித்து வைக்கப்பட்டிருக்கும் இடது கை விரல்களோடு சேருமாறு வைக்கவும்.
- 15 முதல் 30 நிமிடங்கள் வரை இந்த முத்திரையைப் பழகவும்.
தூக்கமின்மையைப் போக்கும் மேற்கண்ட நான்கு முத்திரைகளையும் தொடர்ந்து பழகி வர, இரவில் நல்ல உறக்கத்தைப் பெறலாம்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.
நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் 4 அற்புத முத்திரைகள்
ஆசனம் மற்றும் முத்திரை பயிற்சிகளைப் பயில்வதன் மூலம் உடல், மன நலத்தை செம்மையாகப் பேணலாம் என்று பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. முந்தைய பதிவொன்றில் நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கும் 12 ஆசனங்கள் பற்றி பார்த்திருந்தோம்.
அசீரணத்தைப் போக்கும் 6 சிறந்த முத்திரைகள்
முந்தைய பதிவொன்றில் அசீரணத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள் குறித்து பார்த்திருந்தோம். இன்றைய பதிவில் அசீரணத்தைப் போக்கும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம். அசீரணத்தைப் போக்கும் முத்திரைகள் செரிமானக் கோளாறுகளைப் போக்கி சீரணத்தை மேம்படுத்தும் முத்திரைகளில்
கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகள்
முந்தைய பதிவு ஒன்றில் கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள் பற்றிப் பார்த்தோம். கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகளில் சிலவற்றைப் பற்றி இன்று பார்க்கலாம். முத்திரைகள் எவ்வாறு கழுத்து வலியைப் போக்குகின்றன? குறிப்பிட்ட முத்திரைகள் கழுத்து
2 Responses
மிகவும் அருமையான பதிவு..
மிக்க நன்றி.