இதுவரை நாம் பார்த்த ஆசனங்களில் ஆரம்பக்கட்ட பயிற்சியாளர்களுக்கான நின்று செய்யும் ஆசனங்களை இப்பதிவில் தொகுத்திருக்கிறோம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு ஆசனத்தின் செய்முறை மற்றும் பலன்களை நீங்கள் அறிவீர்கள். நின்று செய்யும் ஆசனங்களின் பொதுவான பலன்கள் என்ன என்று பார்ப்போம்.
(ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்கான 19 எளிய அமர்ந்த நிலை ஆசனங்கள் பற்றிய பதிவைப் பார்க்க, இங்கே click செய்யவும்).
நின்று செய்யும் ஆசனங்களின் பொதுவான பலன்கள்:
- கால் தசைகளையும் மூட்டுக்களையும் பலப்படுத்துகின்றன
- உடல் முழுவது ஆற்றலைப் பெருக்குகின்றன
- நுரையீரலைப் பலப்படுத்துகின்றன
- இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகின்றன
- முதுகுத்தண்டை சீராக வைத்திருக்க உதவுகின்றன
- நிற்கும் நிலையை சரி செய்கின்றன; நாம் நிற்கும் நிலையில் இருக்கும் தவறுகளை சரி செய்ய உதவுகின்றன
- இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன
- சீரண ஆற்றலை அதிகரிக்கின்றன
- வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன
மேலும் பெரும்பாலான நின்று செய்யும் ஆசனங்கள் மூலாதார சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதாக இருக்கும். சீரான மூலாதார இயக்கம் ஆற்றலை வளரும், வளர்ச்சியை ஊக்குவிக்கும், சோம்பலைப் போக்கும். மூலாதாரம் நிலையான தன்மையை உருவாக்கும்.
ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்கான 30 எளிய நின்று செய்யும் ஆசனங்கள்
1) தாடாசனம்
4) பாதஹஸ்தாசனம்
8) பிறையாசனம்
22) விருக்ஷாசனம்
23) உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம்
24) பரிகாசனம்
25) ஆஞ்சநேயாசனம்
26) அஷ்ட சந்திராசனம்
27) வீரபத்ராசனம் 1
28) வீரபத்ராசனம் 2
30) உத்கட கோணாசனம்
மேற்கூறப்பட்டுள்ள நின்று செய்யும் ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர உங்களின் உடலின் ஆற்றல் பெருகுவதையும் உடல் நலம் மேம்படுவதையும் உணர்வீர்கள்
2 Responses
Very nice and very useful.
Thank you for visiting our site and for the feedback.