குழந்தையின்மை பிரச்சினை தொடர்பில் 1990 – 2021 வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் நடப்பு வருடமான 2023-ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சுமார் 6 நபருக்கு 1 நபர் குழந்தையின்மை குறைபாடால் வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாய் கூறுகிறது. ஆண் மற்றும் பெண் மலட்டுத்தன்மைக்கான பொதுவான காரணங்கள் மற்றும் குழந்தையின்மை பிரச்சினையை போக்க உதவும் ஆசனங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
குழந்தைபேறின்மை பிரச்சினைக்கான காரணங்கள்
குழந்தைபேறின்மைக்கான பொதுவான காரணங்களில் சில:
ஹார்மோன் குறைபாடுகள்
ஹார்மோன் குறைபாடுகள் காரணமாக கருமுட்டை உற்பத்தி, விந்தணுவின் தன்மை ஆகியவை பாதிக்கப்படும். சினைப்பை நோய்க்குறி (PCOS – polycystic ovary syndrome) ஏற்படவும் வாய்ப்புண்டு.
உடல்நலக் கோளாறுகள்
சில வகையான உடல்நலக் கோளாறுகளால் மலட்டுத்தன்மை உண்டாகலாம். கருப்பை நார்த்திசுகட்டி (uterine fibroids), கருப்பை உள்வரிக் கழலைகள் (endometrial polyps) உள்ளிட்ட கர்ப்பப்பை பிரச்சினைகளின் காரணமாய் குழந்தைப்பேறின்மை ஏற்படலாம். கருப்பை நார்த்திசுகட்டியின் காரணமாக 2% முதல் 3 % பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஜெர்மனியைச் சேர்ந்த University Hospital of Schleswig-Holstein-ன் Department of Obstetrics and Gynecology அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
சீரற்ற வாழ்க்கை முறை
மலட்டுத்தன்மைக்கு சீரற்ற வாழ்க்கை முறையும் காரணமாய் அமைகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, அதிக மற்றும் குறைவான உடல் எடை , அதீதமான உடலுழைப்பு, தூக்கமின்மை, அதீதமான புகை மற்றும் பழக்கம் ஆகியவற்றின் காரணமாய் மலட்டுத்தன்மை ஏற்படலாம் என்று ஆய்வு மூலம் அறிய முடிகிறது.
சீரான தூக்கமின்மை காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஆய்வுகள் அறிவிக்கின்றன. ஆண்களை விட பெண்களே தூக்கமின்மை காரணமாய் ஏற்படும் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவதாய் ஆய்வுகள் கூறுகின்றன.
மன அழுத்தம்
மன அழுத்தத்திற்கும் குழந்தைபேறின்மைக்கும் நேரடியான தொடர்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும் மன அழுத்தம், மலட்டுத்தனம் ஏற்படுவதற்கான காரணங்களை உருவாக்குவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
யோகா எவ்வாறு குழந்தைபேறின்மை பிரச்சினையைப் போக்குகிறது?
தொடர் யோகாசனப் பயிற்சியின் மூலம் சுரப்பிகளின் இயக்கம் சீராக்கப்பட்டு ஹார்மோன் கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன.
கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் விந்தணு குறைபாடு சார்ந்த பிரச்சினைகளை சரி செய்ய யோகப்பயிற்சி உதவுகிறது.
வாழ்க்கை முறையை மேம்படுத்துவதிலும் யோகா பங்கு வகிக்கிறது. சரியான உடல் எடை பராமரிக்கவும், தூக்கமின்மையைப் போக்கவும் ஆசனப் பயிற்சி உதவுகிறது.
தூக்கமின்மையைப் போக்கும் ஆசனங்கள் பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
அதீதமாய் புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் உள்ளிட்ட பழக்கங்களை கைவிட யோகாசனம் உதவுவதாக ஆய்வு மூலம் தெரிய வருகிறது.
தொடர்ந்து ஆசனங்களைப் பயில்வதால் மன அழுத்தம் நீங்குகிறது. ஆகையால், மன அழுத்தத்தினால் மலட்டுத்தன்மையை உருவாகக் கூடிய காரணிகளைப் போக்க முடியும்.
மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள் பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
குழந்தைபேறின்மையை போக்க உதவும் ஆசனங்கள்
குழந்தைபேறின்மையை போக்கி கருதரிக்க உதவ பின்வரும் ஆசனங்களைத் தொடர்ந்து பழகவும்:
1) பாதஹஸ்தாசனம்
பாதஹஸ்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) உத்தித திரிகோணாசனம்
உத்தித திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) வீரியஸ்தம்பன் ஆசனம்
வீரியஸ்தம்பன் ஆசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) உத்கட கோணாசனம்
உத்கட கோணாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) ஜானு சிரசாசனம்
ஜானு சிரசாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) பஸ்சிமோத்தானாசனம்
பஸ்சிமோத்தானசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) பத்த கோணாசனம்
பத்த கோணாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
8) அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
அர்த்த மத்ஸ்யேந்திராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
9) மர்ஜரியாசனம் – பிடிலாசனம்
மேலே உள்ள படங்களில் காணப்படும் மர்ஜரியாசனம் மற்றும் பிடிலாசனம் ஆகிய இரண்டையும் தொடர் ஆசனமாக செய்வது சிறந்த பலனைத் தரும்.
மர்ஜரியாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
பிடிலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
10) புஜங்காசனம்
புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
11) சேதுபந்தாசனம்
சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
12) சுப்த பாதாங்குஸ்தாசனம்
சுப்த பாதாங்குஸ்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
13) சர்வாங்காசனம்
சர்வாங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
14) சுப்த கோணாசனம்
சுப்த கோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
15) ஹலாசனம்
ஹலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
16) விபரீதகரணீ
விபரீதகரணீ பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
17) மத்ஸ்யாசனம்
மத்ஸ்யாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
18) சாந்தி ஆசனம்
சாந்தி ஆசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.
புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம் (Prostate Enlargement) போக்கும் ஆசனங்கள்
புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம், அய்ம்பது வயதைக் கடந்த ஆண்களிடையே பரவலாகக் காணப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் ஒரு பகுதியான புரோஸ்டேட் சுரப்பி தோராயமாக ஒரு வால்நட் அளவில் இருக்கக் கூடியதாகும்.
கண் பார்வையைக் கூர்மையாக்க உதவும் 10 ஆசனங்கள்
உலகளவில், கண்ணாடி அல்லது தொடு வில்லை (contact lens) அணிபவர்களின் எண்ணிக்கை மிகுந்த அளவில் அதிகரித்திருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கையான முறையில் கண் பார்வையை மேம்படுத்த பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகள் உதவுகின்றன.
நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும் ஆசனங்கள்
பல மணி நேரம் தொடர்ந்து அமர்வதால் உண்டாகும் பிரச்சினைகளைப் பற்றி இதற்கு முந்தைய பதிவில் பார்த்தோம். இன்று நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும் ஆசனங்கள் பற்றி பார்க்கலாம். நீண்ட நேரம்