உடல் மன ஆரோக்கியம்

இருதய நலனைப் பாதுகாக்கும் 16 ஆசனங்கள்

யோகாசனம் பயில்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் உலகளவில் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறான ஆய்வுகள் மூலம் இருதய நலனைப் பாதுகாக்க யோகப்பயிற்சி உதவுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று இருதய நலனைப் பாதுகாக்கும் 16 ஆசனங்கள் பற்றிப் பார்க்கலாம்.

யோகா எவ்வாறு இருதய நலனைப் பாதுகாக்கிறது?

இருதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலமும் இருதய நோய்களுக்கான பெரும்பாலான காரணிகளைத் தவிர்ப்பதன் மூலமும் யோகா இருதய நலனைப் பாதுகாக்கிறது. யோகா இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

உயர் இரத்த அழுத்தம் இருதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். யோகாசனங்கள் பயில்வதால் அதிக இரத்த அழுத்தம் சீராகிறது என்று ஆய்வு அறிவிக்கிறது.  

இருதய நலனைப் பாதித்து இருதய நோய் ஏற்பட நீரிழிவும் ஒரு காரணமாகும். யோகாசனப் பயிற்சியால் இரண்டாம் வகை நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியும் என்பது ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது. 

உடலில் சேரும் கெட்ட கொழுப்பும் இருதய நோயை உண்டாக்கும் என்பதை நாம் அறிவோம். தொடர் யோகப்பயிற்சி உடலில் கெட்ட கொழுப்பை நீக்க உதவுவதோடு நல்ல கொழுப்பின் அளவையும் உயர்த்துகிறது என்பது ஆய்வு முடிவின் மூலம் அறிய முடிகிறது. 

(தொப்பையைக் கரைக்கும் ஆசனங்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்)

இருதய நோய் உருவாக்கும் காரணிகளில் அதிக எடையும் ஒன்று. யோகப்பயிற்சி செய்வதால் அதிக எடை குறைவதை ஆய்வுகள் பலவும் நிரூபித்துள்ளன. அதிக எடை கொண்ட பெண்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றும் உடல் எடையைக் குறைக்க யோகப்பயிற்சி உதவுவதை நிரூபித்துள்ளது. 

இருதய நோய்க்கு மன அழுத்தமும் ஒரு காரணம் என்பதும் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்த மன அழுத்தத்தால் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகளில் மாற்றம் ஏற்படுவதோடு கெட்ட கொழுப்பும் கூடுவதாக ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. யோகாசனம் மன அழுத்தத்தைப் போக்குவதும் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

(மன அழுத்தத்தைப் போக்கும் ஆசனங்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்)

மேலும் யோகாசனப் பயிற்சி, உடல் சார்ந்த பயிற்சியாக மட்டுமில்லாமல், சரியான நேரத்தில் சமச்சீர் உணவை உண்ணுதல், ஆழ்ந்த உறக்கம் கொள்ளுதல் , மன அமைதியோடு இருத்தல் என மனம் சார்ந்த பயிற்சியாகவும் விளங்குகிறது என்பதால்  வாழ்க்கை தரம் மேம்படுகிறது; இருதயமும் பலமாக விளங்குகிறது.  

இருதய நலனைப் பாதுகாக்கும் 16 சிறந்த ஆசனங்கள்

இருதய நோய்களைப் போக்கவும், இருதய நோய்களைத் தவிர்க்கவும் குறிப்பிட்ட சில ஆசனங்கள் பெரிதும் உதவுகின்றன. இருதய நலனைப் பாதுகாக்கும் 16 சிறந்த ஆசனங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன:

1) அர்த்த சக்ராசனம்

அர்த்த சக்ராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) உத்கட கோணாசனம்

உத்கட கோணாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

3) அஷ்ட சந்திராசனம்

அஷ்ட சந்திராசனம் பலன்கள் மற்றும் செய்முறைக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

4) ஆஞ்சநேயாசனம்

ஆஞ்சநேயாசனம் பலன்கள் மற்றும் செய்முறைக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

foam rollers
5) பரத்வாஜாசனம்

பரத்வாஜாசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) சேதுபந்தாசனம்

சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

7) ஏக பாத சேதுபந்தாசனம்

ஏக பாத சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

8) சதுஷ் பாதாசனம்

சதுஷ் பாதாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

9) அர்த்த ஹலாசனம்

அர்த்த ஹலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

10) பவன முக்தாசனம்

பவன முக்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

11) துவபாத தனுராசனம்

துவபாத தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

12) ஊர்த்துவ தனுராசனம்

ஊர்த்துவ தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

13) விபரீதகரணீ

விபரீதகரணீ பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

14) அர்த்த சிரசாசனம்

அர்த்த சிரசாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

15) சிரசாசனம்

சிரசாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

16) சாந்தி ஆசனம்

சாந்தி ஆசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இருதயத்தைக் காக்கும் 16 ஆசனங்களைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலனோடு  சிறப்பாக வாழலாம்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

தூக்கமின்மையைப் போக்கும் சிறந்த யோகாசனங்கள்

இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ளாதவர்களை நோய்கள் பீடிக்கும் என்பதை அன்றே சித்தர்கள் பின்வரும் பாடல் மூலம் கூறியுள்ளனர். “சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய்

Read More »

முதுகுவலியைப் போக்கி முதுகைப் பலப்படுத்தும் 24 ஆசனங்கள்

சமீப வருடங்களில் முதுகுவலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முதுகுவலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பொதுவான காரணங்களில் ஒன்று இன்றைய வாழ்க்கைச் சூழல் உருவாக்கியிருக்கும் வேலைமுறை தான். என்னடா இது, எதை எடுத்தாலும் இன்றைய

Read More »

இளமையைப் பராமரிக்க 14 ஆசனங்கள்

ஒவ்வொரு வயது கூடும் போதும் தவிர்க்க இயலாமல் மனம் பின்னோக்கி வாழ்க்கையை அலசுவதும், செய்தவற்றையும்,  செய்யத் தவறியவற்றையும், செய்ய வேண்டியவைகளையும் பட்டியலிடுவதாக இருக்கிறது. சிறு குழந்தைகளின் மனம் உன்னதமானது. பள்ளிக்கூடம் (online வகுப்பாக இருந்தாலும்)

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்