உடல் மன ஆரோக்கியம்

கழுத்து வலியைப் போக்கும் 12 சிறந்த எசன்சியல் எண்ணெய்கள்

முந்தைய பதிவு ஒன்றில் கழுத்து வலிக்கான காரணங்கள் மற்றும் கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள் பற்றியும் பார்த்தோம். கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகள் குறித்தும் பதிவை வெளியிட்டிருக்கிறோம். கழுத்து வலியைப் போக்க எசன்சியல் எண்ணெய்கள் உதவுவதாக ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது. இன்று கழுத்து வலியைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் பற்றிப் பார்க்கலாம். 

கழுத்து வலியைப் போக்க எசன்சியல் எண்ணெய்கள் எவ்வாறு உதவுகின்றன?

Photo by Karolina Grabowska: https://www.pexels.com/photo/bottle-of-beauty-oil-and-big-green-leaf-4465969/

குறிப்பிட்ட எசன்சியல் எண்ணெய்களில் உள்ள anti-inflammatory, antispasmodic, analgesic மற்றும் antidepressant தன்மைகள் கழுத்து வலியைப் போக்குவதில் உதவுகின்றன. 

கழுத்து வலியைப் போக்கும் 12 சிறந்த எசன்சியல் எண்ணெய்கள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள எசன்சியல் எண்ணெய்கள் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றன:

1) Eucalyptus Essential Oil

Eucalyptus essential oil-ன் analgesic தன்மை கழுத்து வலியைப் போக்க உதவுகிறது. மேலும் eucalyptus சளியைப் போக்கவும் உதவுவதால் தீவிர சளித் தொல்லையால் ஏற்படும் கழுத்து வலியைத் தவிர்க்கவும் உதவுகிறது.

Eucalyptus எசன்சியல் எண்ணெய் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) Ginger Essential Oil

Ginger essential oil வலி மற்றும் வீக்கத்தைப் போக்கும் தன்மை கொண்டது. இதன் காரணமாக கழுத்து வலியைப் போக்க ginger எசன்சியல் எண்ணெய் உதவுகிறது.

Ginger எசன்சியல் எண்ணெய் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

3) Peppermint Essential Oil

Peppermint எசன்சியல் எண்ணெய் வலி, தசைப்பிடிப்பு மற்றும் வீக்கத்தைப் போக்கும் தன்மை கொண்டது. ஆகையால், கழுத்து வலிக்கான சிறந்த எசன்சியல் எண்ணெய்களில் ஒன்றாக peppermint எசன்சியல் எண்ணெய் கருதப்படுகிறது.

Peppermint எசன்சியல் எண்ணெய் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

4) Black Pepper Essential Oil

Black pepper எசன்சியல் எண்ணெய் தசைப்பிடிப்பு, கீல்வாதம் போன்றவற்றைப் போக்க உதவுகிறது. எனவே, கழுத்து வலியைப் போக்க black pepper எசன்சியல் எண்ணெய் பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும்.

Black pepper எசன்சியல் எண்ணெய் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) Chamomile Essential Oil

வலி நீக்கியாகவும் கீல்வாதத்தைக் குணப்படுத்தவும் Chamomile எசன்சியல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மேலும் chamomile எசன்சியல் எண்ணெய் மன பதட்டத்தைக் குறைக்க உதவுவதால், பதட்டம் சார்ந்த காரணங்களால் ஏற்படும் கழுத்து இறுக்கத்திற்கும் கழுத்து வலிக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.

Chamomile எசன்சியல் எண்ணெய் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) Lavender Essential Oil

Lavender எசன்சியல் எண்ணெய் anti-inflammatory, analgesic மற்றும் anti-depressant தன்மைகள் உடையது என்பதால் கழுத்து வலியைப் போக்கும் சிறந்த எசன்சியல் எண்ணெய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Lavender எசன்சியல் எண்ணெய் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

herbal
7) Marjoram Essential Oil

Marjoram எசன்சியல் எண்ணெய் தசைப்பிடிப்பைப் போக்க உதவுகிறது. மேலும் marjoram எசன்சியல் எண்ணெய் anti-inflammatory மற்றும் analgesic தன்மைகள் கொண்டது என்பதால் கழுத்து வலியைப் போக்க பெரிதும் உதவுகிறது.

Marjoram எசன்சியல் எண்ணெய் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

8) Bergamot Essential Oil

Bergamot எசன்சியல் எண்ணெயில் இருக்கும் linalool என்னும் கூறு எசன்சியல் எண்ணெயில் வலி நீக்கும் தன்மையில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வு மூலம் தெரிய வருகிறது. மேலும் bergamot எசன்சியல் எண்ணெய் மன அமைதியைத் தூண்டும் தன்மை கொண்டதால் மன அழுத்தம் காரணமாக ஏற்படும் கழுத்து வலியைப் போக்கவும் உதவுகிறது.

Bergamot எசன்சியல் எண்ணெய் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Essentialoils
9) Basil Essential Oil

Basil எசன்சியல் எண்ணெய் anti-inflammatory மற்றும் analgesic தன்மைகளைக் கொண்டதால் கழுத்து வலியைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்களில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

Basil எசன்சியல் எண்ணெய் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

10) Juniper Essential Oil

Juniper எசன்சியல் எண்ணெய் anti-inflammatory மற்றும் analgesic தன்மைகள் உடையதாக ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கழுத்து வலி போக்கும் சிறந்த எசன்சியல் எண்ணெய்களில் Juniper எசன்சியல் எண்ணெயும் இடம் பெறுகிறது.

Juniper எசன்சியல் எண்ணெய் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

11) Copaiba Essential Oil

Copaiba எசன்சியல் எண்ணெய் தசைப்பிடிப்பு மற்றும் வலியைப் போக்கும் திறன் கொண்டதாக ஆய்வுகள் அறிவிக்கின்றன. மேலும் copaiba எசன்சியல் எண்ணெய் பதட்டத்தைப் போக்கும் தன்மை கொண்டது. எனவே இந்த எசன்சியல் எண்ணெய் பதட்டத்தால் ஏற்படும் கழுத்து இறுக்கம் மற்றும் கழுத்து வலியைப் போக்கவும் வல்லது.

Copaiba எசன்சியல் எண்ணெய் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

12) Clary Sage Essential Oil

கழுத்து வலியைப் போக்க clary sage எசன்சியல் எண்ணெய் உதவுகிறது. ஆய்வு ஒன்றின் மூலம் clary sage எசன்சியல் எண்ணெயின் anti-inflammatory தன்மைகள் உறுதி செய்யப்பட்டதோடு, மன அழுத்தத்தைப் போக்கும் மிகச் சிறந்த எசன்சியல் எண்ணெயாக clary sage எசன்சியல் எண்ணெய் விளங்குவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Clary Sage எசன்சியல் எண்ணெய் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கழுத்து வலிக்கான எசன்சியல் எண்ணெய்களைப் பயன்படுத்தும் முன் எசன்சியல் எண்ணெய்களை நீர்க்கச் செய்யும் முறைப்படி  பயன்படுத்தவும். 

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்