முன்னரே கூறியிருந்தபடி இந்தப் 10 நிமிட யோகப்பயிற்சி தொடரின் நோக்கம் குறைவான நேரம் உள்ளவர்களும் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட உதவுவதுதான். இதுவரை நாம் மூன்று தொடர்களைப் பார்த்துள்ளோம். இன்று பார்க்கவிருப்பது 10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 4
10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 1-ஐப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 2-ஐப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 3-ஐப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
10 நிமிட யோகப்பயிற்சி தொடர் 4
இத்தொடரில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்கள் அனைத்தும் வயிறு மற்றும் முதுகைப் பலப்படுத்துபவையாகும். இவற்றில் பெரும்பாலான ஆசனங்கள் தொப்பையைக் கரைக்க உதவுகின்றன.
1) சேதுபந்தாசனம்
(30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை)
அதிக இரத்த அழுத்தத்தைப் போக்கும் ஆசனமான சேதுபந்தாசனம், ஆஸ்துமா போக்கும் ஆசனமாகவும் விளங்குகிறது.
சேதுபந்தாசனம் செய்முறை மற்றும் பலன்கள் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) அர்த்த ஹலாசனம்
(20 வினாடிகள்)
அர்த்த ஹலாசனம் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. தொப்பையைக் கரைக்கும் ஆசனங்களில் இதுவும் ஒன்று.
அர்த்த ஹலாசனம் செய்முறை மற்றும் பலன்கள் அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) பவன முக்தாசனம்
(20 வினாடிகள்)
தொப்பையைக் கரைக்கும் ஆசனமான பவன முக்தாசனம் சீரணத்தையும் மேம்படுத்துகிறது.
பவன முக்தாசனம் செய்முறை மற்றும் பலன்கள் அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) புஜங்காசனம்
(20 வினாடிகள்)
புஜங்காசனம், கழுத்து மற்றும் தோள்வலியைப் போக்க உதவுகிறது. இவ்வாசனம் மாதவிடாய் கோளாறுகளையும் நேர் செய்கிறது.
புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) சலபாசனம்
(20 வினாடிகள்)
சலபாசனம் முதுகுத் தசைகளை பலப்படுத்துவதோடு கால் தசைகளையும் பலப்படுத்துகிறது.
சலபாசனம் பலன்கள் மற்றும் செய்முறை அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) தனுராசனம்
(20 வினாடிகள்)
நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் தனுராசனம், சர்க்கரை அளவைக் கட்டுப்பத்தும் ஆசனமாகவும் பலன் தரக் கூடியது.
தனுராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) மகராசனம்
(1 முதல் 2 நிமிடங்கள் வரை)
மகராசனம் முதுகு வலியைப் போக்கும் ஆசனமாகும். இது இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கவும் உதவுகிறது.
மகராசனம் பலன்கள் மற்றும் செய்முறை அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
8) மத்ஸ்யாசனம்
(2 நிமிடங்கள்)
மத்ஸ்யாசனம் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இவ்வாசனம் கழுத்து மற்றும் முதுகுவலியைப் போக்கவும் உதவுகிறது.
மத்ஸ்யாசனம் பலன்கள் மற்றும் செய்முறை அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
9) சாந்தி ஆசனம்
(2 நிமிடங்கள்)
சாந்தி ஆசனம் இருதய படபடப்பைப் போக்குகிறது. இவ்வாசனம் தூக்கமின்மையை சரி செய்வதோடு நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்துகிறது.
சாந்தி ஆசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.