நாங்கள் முன்னர் பதிவிட்டிருந்ததைப் போல் 10 நிமிட யோகப்பயிற்சி தொடரின் 2-வது பகுதியை இன்று வெளியிடுகிறோம். (10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 1-ஐப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்).
10 நிமிட யோகப்பயிற்சி – 2
இன்றைய 10 நிமிட யோகப்பயிற்சி – 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்கள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு பலன்கள் இருந்தாலும் பெரும்பாலான ஆசனங்களின் பொதுவான பலன்கள் முதுகுத்தண்டு, முதுகுத் தசைகள் மற்றும் சீரணத்தைப் பலப்படுத்தப்படுதல் ஆகும்.
1) பதுமாசனம்
(1 நிமிடம்)
மூளைத்திறனை அதிகரிக்க உதவும் பதுமாசனம், தியான ஆசனங்களில் முதன்மையானவற்றில் ஒன்று. இவ்வாசனம் நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.
பதுமாசனம் பலன்கள் மற்றும் செய்முறை அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) தண்டாசனம்
(1 நிமிடம்)
இடுப்புப் பகுதியைப் பலப்படுத்தும் தண்டாசனம், கால்களின் சோர்வைப் போக்கும் ஆசனமாகவும் விளங்குகிறது.
தண்டாசனம் பலன்கள் மற்றும் செய்முறையைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) அர்த்த பூர்வோத்தானாசனம்
(20 வினாடிகள் x 2)
அர்த்த பூர்வோத்தானாசனம் உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இவ்வாசனம் தோள், கை மற்றும் கால்களைப் பலப்படுத்துகிறது.
அர்த்த பூர்வோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறையைப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) மர்ஜரியாசனம் / பிடிலாசனம் தொடர்
(1 நிமிடம்)
வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை செம்மையாக்குவதோடு, மர்ஜரியாசனம் மற்றும் பிடிலாசனத்தை தொடர்ச்சியாக மாறி மாறி ஒரு நிமிடம் வரை செய்யும் போது மன அழுத்தமும் நீங்குகிறது.
மர்ஜரியாசனம் பலன்கள் மற்றும் செய்முறையைப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
பிடிலாசனம் பலன்கள் மற்றும் செய்முறையைப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) அதோ முக ஸ்வானாசனம்
(1 நிமிடம்)
அதோ முக ஸ்வானாசனம் பயில்வதால் நோய் எதிர்ப்புத் திறன் வளர்கிறது, நாள்பட்ட தலைவலியைப் போக்கவும் இவ்வாசனம் உதவுகிறது.
அதோ முக ஸ்வானாசனம் பலன்கள் மற்றும் செய்முறையைப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) வஜ்ஜிராசனம்
(30 வினாடிகள் x 2)
வஜ்ஜிராசனம் சையாடிக் வலியைப் போக்கும் ஆசனமாகும். இவ்வாசனத்தைத் தொடர்ந்து பழகி வர சீரணம் மேம்பட்டு வயிற்றுப் புண் போன்ற உபாதைகளிலிருந்து விடுபடலாம்.
வஜ்ஜிராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) பார்சுவ பாலாசனம்
(30 வினாடிகள் – வலது, இடது என பக்கத்திற்கு ஒரு முறை)
பார்சுவ பாலாசனம் பழகுவதால் உடல், மன சோர்வு அகலுகிறது.
பார்சுவ பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
8) சாந்தி ஆசனம்
முன்னரே கூறியிருந்தது போல் 10 நிமிட யோகப்பயிற்சியை நிறைவு செய்ய இரண்டு நிமிடங்களாவது சவாசனம் எனப்படும் சாந்தி ஆசனத்தில் இருக்க வேண்டும்.
சாந்தி ஆசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.