பெரும்பாலானவர்கள் நேரப் பற்றாக்குறையால் முதலில் கைவிடுவது உடற்பயிற்சியைத்தான். நீங்கள் தொடர்ந்து யோகா அல்லது வேறு உடற்பயிற்சி பயின்று வருபவராய் இருந்தால் என்றாவது ஒரு நாள் பயிற்சி செய்ய இயலாமல் போகும் போது ஒருவித குற்ற உணர்வை அனுபவித்திருக்க நேரலாம். இந்நிலையைத் தவிர்க்கவும் குறைவான நேரத்திலும் நிறைவான யோகப்பயிற்சி செய்யவும் ஏற்ற வகையில் உங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது 10 நிமிட யோகப்பயிற்சி தொடர்.
அது சரி, இது என்ன தொடர்1 என்று யோசிக்கிறீர்களா? எப்பொழுதாவது நேரப்பற்றாக்குறையால் 10 நிமிடப் பயிற்சி செய்பவர்களுக்கு ஒரு 10 நிமிட யோகப்பயிற்சி குறிப்பு போதுமானது. தொடர்ந்தே 10 நிமிடம் மட்டுமே பயில்பவர்களுக்காகவே இது தொடராக வருகிறது. இத்தொடரிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொடராகப் பயிலும் போது பல ஆசனங்களின் பலன்களும் கிடைக்கும்.
ஆயினும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு மணி நேர யோகப்பயிற்சி செய்வது சிறப்பானது – சரியாக சொல்தென்றால் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு ஒரு மணி நேரம் யோகப்பயிற்சி செய்வது கூடுதல் சிறப்பானது.
10 நிமிட யோகப்பயிற்சி – 1
இதோ உங்களுக்காக முதலாம் 10 நிமிட யோகப்பயிற்சி.
1) தாடாசனம்
(30 வினாடிகள்)
உடலின் சமநிலையை பராமரிக்கும் தாடாசனம், சையாடிக் வலியைப் போக்கும் ஆசனமாகவும் பயன் தருகிறது.
தாடாசனம் செய்முறை மற்றும் பலன்களுக்கு, இப்பக்கத்திற்குச் செல்லவும்.
2) அர்த்த உத்கடாசனம்
(30 வினாடிகள்)
அர்த்த உத்கடாசனம் மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இவ்வாசனத்தைத் தொடர்ந்து செய்தால் மாத்திரைகளைத் தவிர்த்து இயற்கையான முறையில் மாதவிடாய் வலிகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
அர்த்த உத்கடாசனம் செய்முறை மற்றும் பலன்களுக்கு, இப்பக்கத்திற்குச் செல்லவும்.
3) உத்கடாசனம்
(20 வினாடிகள்)
நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தவும் கால்களை பலப்படுத்தவும் உதவும் உத்கடாசனம், சீரண கோளாறுகளையும் போக்க உதவுகிறது. தொப்பையைக் கரைக்கும் ஆசனங்களில் உத்கடாசனத்திற்கும் நிச்சயமான இடமுண்டு.
உத்கடாசனம் செய்முறை மற்றும் பலன்கள் அறிய, இப்பக்கத்திற்குச் செல்லவும்.
4) உத்தானாசனம்
(20 வினாடிகள்)
உடல் முழுவதையும் நீட்சியடையச் செய்யும் ஆசனமான உத்தானாசனத்தைத் தொடர்ந்து பயின்று வருவதன் மூலம் சையாடிக் வலியிலிருந்து விடுதலை பெறலாம்.
உத்தானாசனம் செய்முறை மற்றும் பலன்களுக்கு, இப்பக்கத்திற்குச் செல்லவும்.
5) அர்த்த சக்ராசனம்
(20 வினாடிகள்)
அர்த்த சக்ராசனம் முதுகு வலியைப் போக்குகிறது. தொடர்ந்து இவ்வாசனத்தைப் பழகி வர மாதவிடாய் கோளாறுகளும் நீங்கும்.
அர்த்த சக்ராசனம் செய்முறை மற்றும் பிற பலன்கள் அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) திரிகோணாசனம்
(30 வினாடிகள் X 2 – வலம், இடது என பக்கத்திற்கு ஒரு முறை)
நுரையீரலைப் பலப்படுத்தும் ஆசனங்களில் திரிகோணாசனமும் ஒன்று. இவ்வாசனம் கழுத்து வலி மற்றும் முதுகுவலியையும் போக்க உதவுகிறது.
திரிகோணாசனம் செய்முறை மற்றும் பிற பலன்களை அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) அதோ முக ஸ்வானாசனம்
(1 நிமிடம்)
வயிற்று வலியையும் நாள்பட்ட தலைவலியையும் போக்கும் அதோ முக ஸ்வானாசனம், மன அழுத்தத்தைப் போக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
அதோ முக ஸ்வானாசனம் செய்முறை மற்றும் பலன்கள் அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
8) பாலாசனம்
(30 வினாடிகள்)
சோர்வைப் போக்கி உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும் ஆசனமாகிய பாலாசனத்தைத் தொடர்ந்து பயிலும் போது சீரணமும் மேம்படுகிறது.
பாலாசனம் செய்முறை மற்றும் பலன்கள் அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
9) வீரபத்ராசனம் 1
(30 வினாடிகள் X 2 – வலம், இடது என பக்கத்திற்கு ஒரு முறை)
உடல் முழுமைக்கும் ஆற்றல் தரும் வீரபத்ராசனம் 1, சையாடிக் வலி மற்றும் கழுத்து வலியையும் போக்க உதவுகிறது.
வீரபத்ராசனம் 1 செய்முறை மற்றும் பலன்கள் அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
10) வீரபத்ராசனம் 2
(30 வினாடிகள் X 2 – வலம், இடது என பக்கத்திற்கு ஒரு முறை)
வீரபத்ராசனம் 2-ஐத் தொடர்ந்து பயிலும் போது கால்கள் வலுப்பெறுகிறது. உடலின் சமநிலை மேம்படுகிறது.
வீரபத்ராசனம் 2 செய்முறை மற்றும் பலன்கள் அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
11) சாந்தி ஆசனம்
உடல், மனம் இரண்டிற்கும் புத்துணர்வைத் தரும் சாந்தி ஆசனம் மனதை ஒருமுகப்படுத்தவும் தியான நிலைக்குக் கொண்டு செல்லவும் உதவுகிறது. ஆசனப்பயிற்சியின் இறுதியில் சாந்தி ஆசனத்தைச் செய்வது அவசியமாகும். இவ்வாசனத்தைப் பழகக் குறிப்பிட்ட கால அவகாசம் இல்லையென்றாலும் 10 நிமிட யோகப் பயிற்சியின் நிறைவாக சுமார் 2 நிமிடங்களாவது சாந்தி ஆசனத்தில் இருப்பது நலம்.
சாந்தி ஆசனம் செய்முறை மற்றும் பலன்கள் அறிய, இப்பக்கத்திற்குச் செல்லவும்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.