உடல் மன ஆரோக்கியம்

ஓட்டப்பயிற்சி செய்பவர்களுக்கான 10 சிறந்த ஆசனங்கள்

யோகாவின் பன்முகத்தன்மையின் காரணமாக அது அனைத்து வகை பயிற்சிகளோடு இசைந்து செய்யத்தக்கதாயும் மற்றைய பயிற்சிகளைப் பயிலும் போது மேம்படுத்தப்பட்ட விளைவுகளைத் தர உதவுவதாகவும் உள்ளது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது ஓட்டப்பயிற்சி செய்பவர்களுக்கான ஆசனங்கள்.

ஓட்டப்பயிற்சி செய்பவர்கள் ஏன் யோகா பயில வேண்டும்?

ஓட்டப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு யோகா எப்படி உதவுகிறது என்று பார்ப்போம்.

உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது 

ஓட்டப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு சமநிலை எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உடலின் சமநிலை சீராக இருக்கும் போது, ஓடுவதற்கு தேவைக்கு அதிகமான ஆற்றல் செலவழிக்கப்படாததோடு, ஓட்டத் திறனும் சிறப்பாக இருக்கும். இவை நீண்ட தூரம் ஓடுவதற்கு அத்தியாவசியமானவையும் கூட. யோகாசனப் பயிற்சி உடலின் சமநிலையைப் பராமரிக்க உதவுவதால் ஓட்டப்பயிற்சியினால் கிடைக்கும் விளைவுகளும் சிறப்பாக இருக்கும்.

உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது

ஓட்டப்பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடும் போது உடலின் நெகிழ்வுத்தன்மை குறைகிறது. இடுப்பு முதல் கால் வரை உள்ள தசைகள் மற்றும் மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை யோகாசனம் அதிகரிக்க உதவுகிறது. நல்ல நெகிழ்வுத்தன்மை காயங்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

சுவாசம் விடும் முறை மேம்படுகிறது

யோகா பயில்வதால் சுவாச முறை சீராகிறது. ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு நுரையீரலின் செயல்பாடு செம்மையாக இருப்பது மிகவும் அவசியம்.  ஓட்டப்பயிற்சியின் போது எவ்வாறு மூச்சு விடுவது என்பது பற்றி வெவ்வேறு கருத்துகள் உள்ளன. மூக்கு வழியாக மட்டுமே மூச்சை உள்ளிழுப்பது, மூக்கு மற்றும் வாய் வழியாக மூச்சை உள்ளிழுப்பது போன்றவையும் அதில் அடங்கும்.

சில வருடங்களுக்கு முன் நடைப்பெற்ற ஆய்வு ஒன்றின் மூலம், ஓட்டப்பயிற்சியின் போது மூக்கால் மட்டுமே மூச்சை உள்ளிழுத்தல்  சிறந்த பலன்களைத் தருவதாகத் தெரிய வருகிறது. தேர்ந்த ஓட்டப்பயிற்சியாளர்களைத் தவிர பலரும் ஓடும் போது சுவாசத்திலிருந்து கவனம் விலகி விடுகிறது. யோகாசனம் பயில்வதால் நுரையீரல் பலம் பெறுவதோடு ஓடும் போது சுவாசத்தின் மேல் மனதைக் குவித்து சிறப்பான முறையில் ஓடவும் உதவுகிறது.

மேலும் யோகாசனம் பயில்வதால் தசைகள் மற்றும் மூட்டுகளின் சோர்வு நீங்குகிறது. ஓட்டப்பயிற்சியினால் ஏற்படும் தசை சோர்வை ஆசனங்கள் போக்கி முழு உடலுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. 

https://www.herbspro.com/
ஓட்டப்பயிற்சி செய்பவர்களுக்கான 10 சிறந்த ஆசனங்கள்

ஓட்டப்பயிற்சி செய்பவர்களுக்கான ஆசனங்கள் பற்றி இப்போது பார்ப்போம்.

1) உத்தானாசனம்

உத்தானாசனம் செய்வதால் இடுப்பு தசைகள் தொடங்கி தொடையின் பின்புற தசைகள், ஆடுசதை மற்றும் முட்டி ஆகியவை பலம் பெறுகின்றன.

உத்தானாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

2) உத்தித திரிகோணாசனம்

உத்தித திரிகோணாசனம் கால்களை நீட்சியடையச் செய்கிறது. கால் தசைகளைப் பலப்படுத்துவதோடு இடுப்பு மற்றும் முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. எனவே ஓட்டப்பயிற்சி செய்பவர்களுக்கான ஆசனங்களில் இந்த ஆசனத்திற்கும் முக்கிய இடமுண்டு.

உத்தித கோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

3) ஆஞ்சனேயாசனம் 

ஆஞ்சநேயாசனம் தொடைப் பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்துகிறது. இடுப்புப் பகுதியையும், புட்ட தசைகளையும் பலப்படுத்துகிறது. கால் முட்டியினை பலமாக்குவதோடு உடலின் சமநிலையையும் பராமரிக்கிறது. 

ஆஞ்சநேயாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) விருக்ஷாசனம்

விருக்ஷாசனம் தொடை முதல் பாதம் வரை  கால்களை முழுமையாகப் பலப்படுத்துகிறது. இவ்வாசனம் இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது. 

விருக்ஷாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) சதுரங்க தண்டாசனம்

சதுரங்க தண்டாசனம் உடலின் மையப்பகுதியில் உள்ள தசைகளை வலுவாக்குகிறது. ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடலின் மையப்பகுதி உறுதியாக இருப்பது ஓட்டத்திறனை மேம்படுத்துவதோடு வலி மற்றும் காயங்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. 

சதுரங்க தண்டாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) அதோ முக ஸ்வானாசனம்

அதோமுக ஸ்வானாசனம் தொடையின் பின்புற தசைகள், ஆடுசதை மற்றும் பாதங்களை நீட்சியடையவும் பலப்படுத்தவும் செய்கிறது. 

அதோ முக ஸ்வானாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

7) பாலாசனம்

பாலாசனம் முதுகு, தொடை, முட்டி மற்றும் கணுக்கால்களை நீட்சியடையச் செய்கிறது. கணுக்கால்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. உடல் சோர்வைப் போக்குகிறது. 

பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

8) பத்ராசனம்

Auspicious Pose

ஓட்டப்பயிற்சி செய்பவர்களுக்கான  முக்கிய ஆசனங்களில் ஒன்று பத்ராசனம்.  இவ்வாசனம் இடுப்பு தொடங்கி பாதம்வரை நீட்சியடையச் செய்வதோடு பலப்படுத்தவும் செய்கிறது. முதுகுத் தசைகளின் இறுக்கத்தைப் போக்கித் தளர்வாக்குகிறது.

பத்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

9) சேதுபந்தாசனம்

சேதுபந்தாசனம் அடிமுதுகு வலியைப் போக்குகிறது.  இவ்வாசனத்தைப் பயில்வதால் இடுப்புப் பகுதி நெகிழ்வடைகிறது. கால்களும் புத்துணர்வு பெறுகின்றன.

சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

10) சுப்த பாதாங்குஸ்தாசனம்

Reclining Hand to Big Toe Pose

ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் செய்ய வேண்டிய முக்கிய ஆசனங்களில் ஒன்றான சுப்த பாதாங்குஸ்தாசனம், இடுப்பு மற்றும் கால்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; கால் தசைகளைப் பலப்படுத்துகிறது.  

சுப்த பாதாங்குஸ்தாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஓட்டப்பயிற்சி செய்பவர்களுக்கான சிறந்த 10 ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர ஓட்டப்பயிற்சியின் பலன்களை இடைவிடாமல் அனுபவிக்கலாம்.

மூட்டழற்சிக்கான 14 ஆசனங்கள் பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

வெறும் கால்களில் மணலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்

நடைப்பயிற்சி தரும் நன்மைகள் மற்றும் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இதற்கு முன்னர் பார்த்திருக்கிறோம். இன்று வெறும் கால்களில் மணலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். அதற்கும் முன்னர் வெறும்

Read More »

மலையேற்றப் பயிற்சியின் நன்மைகள்

வீட்டு மொட்டை மாடி, பூங்கா, சாலை என நடைப்பயிற்சி செய்வது பல வகையான இடங்களில் என்றாலும் இவை அனைத்திற்கும் பொதுவான சில பலன்கள் இருப்பதை நாம் அறிவோம். அது போலவே, இவை ஒவ்வொன்றுக்குமே பிரத்தியேகமான

Read More »

ஒரு வாரம் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்ததில் எனக்கு கிடைத்த நன்மைகள் என்ன?

பின்னோக்கி நடப்பதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், பின்னோக்கி நடத்தல் அற்புதமான பலன்களைத் தரும் ஒரு பயிற்சி. 100 அடிகள் பின்னோக்கி நடப்பது 1000 அடிகள் முன்னோக்கி நடப்பதற்கு சமம் என்று கூறப்படுகிறது. பல

Read More »

2 Responses

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்