உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (44) – மாலாசனம் / நமஸ்காராசனம் (Garland Pose / Squat Pose)

வடமொழியில் ‘மாலா’ என்றால் மாலை, ‘நமஸ்காரம்’ என்றால் வணக்கம். அதாவது இந்த ஆசனத்தை செய்யும் போது உடல் மாலை வடிவில் இருப்பதால் மாலாசனம் என்றும் இதில் வணக்கம் சொல்வதால் நமஸ்காராசனம் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Garland Pose மற்றும் Squat Pose என்றும் அழைக்கப்படுகிறது.

மாலாசனம் அடி முதுகு, இடுப்பு தொடங்கி பாதம் வரை நீட்சியடைய (stretch) வைக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தும் ஆசனமான இது தியானத்திற்கு மிகவும் ஏற்றதாகும். இது மனதை அமைதிப்படுத்துவதுடன், கவனத்தை ஒருமுகப்படுத்தும் வலிமையும் கொண்டது.

Garland Pose benefits

மாலாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • இடுப்பை வலுப்படுத்துவதுடன் இடுப்பின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது.
  • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
  • தொடைகளை வலுப்படுத்துகிறது.
  • தொடர்ந்து பயிலும்போது சுகப்பிரசவம் ஆக உதவுகிறது.
  • அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
  • கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
செய்முறை
  • தாடாசனத்தில் நிற்கவும்.
  • கால்களுக்கு இடையில் சுமார் இரண்டு அடி இடைவெளி விட்டு நிற்கவும்.
  • கால் முட்டியை மடித்து உட்காருவது போல் இடுப்பைத் தாழ்த்தவும்.
  • தொடைகளை விரிக்கவும். தொடைகளுக்கு இடையில் உங்களின் மேல் உடலை விட அதிக அகலத்தில் இடைவெளி இருக்க வேண்டும்.
  • மேலுடலைச் சற்று முன்புறமாகக் கொண்டு வரவும்.
  • கைகளை மடித்து இரண்டு உள்ளங்கைகளையும் வணக்கம் சொல்லும் முறையில் சேர்த்து வைக்கவும். மேற்கைகள் தொடைகளின் உள்பக்கம் இருக்குமாறு வைக்கவும். பாதங்கள் தரையில் இருக்க வேண்டும்.
  • 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். பயிற்சி செய்யச் செய்ய நேரத்தை அதிகரித்து ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் வரை இந்த ஆசனத்தில் இருக்கவும்.
குறிப்பு

குதிகால்களைத் தரையில் வைக்க முடியவில்லையென்றால், பாதங்களுக்கு அடியில் விரிப்பை வைக்கவும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனமாக இருந்தாலும் சுவரை ஒட்டியோ கைகளால் நாற்காலி போன்ற பொருட்களைப் பிடித்தோ இந்த ஆசனத்தைப் பயிலவும்.

தீவிர அடி முதுகு வலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.

இன்று ஒரு ஆசனம் (45) – உத்தித நமஸ்காராசனம் / உத்தித மாலாசனம் (Extended Leg Squat Pose)

வடமொழியில் ‘உத்தித’ என்றால் ‘நீட்டுதல்’, ‘நமஸ்கார’ என்றால் ‘வணக்கம்’ என்று பொருள். இந்த ஆசனத்தில் ஒரு கால் நன்றாக நீட்டப்பட்டு இரு கைகளால் வணக்கம் சொல்வதால் இந்தப் பெயர் பெற்றது. இது மாலாசனத்தின் ஒரு

Read More »

இன்று ஒரு ஆசனம் (43) – பரத்வாஜாசனம் (Bharadvaja’s Twist)

பரத்வாஜாசனம் என்னும் ஆசனம் பரத்வாஜ முனிவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. அமர்ந்த நிலையில் செய்யப்படும் ஆசனமான பரத்வாஜாசனம் மூலாதாரம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்களைத் தூண்டுகிறது. மூலாதாரச் சக்கரத்தின் சீரான இயக்கம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

Read More »

இன்று ஒரு ஆசனம் (42) – பத்த கோணாசனம் (Bound Angle Pose)

வடமொழியில் ‘பத்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Bound Angle Pose, Butterfly Pose மற்றும் Cobbler’s Pose என்றும் அழைக்கப்படுகிறது. பத்த கோணாசனம் மூலாதாரம்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்