உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (26) – அர்த்த மத்ஸ்யேந்திராசனம் (Half Spinal Twist)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘அரை’, ‘’மத்ஸ்ய’ என்றால் ‘மீன்’, ‘இந்திர’ என்றால் ‘அரசன்’. ஆக, இது மீன்களின் அரசனின் பாதி நிலை ஆசனம் என்பதாகும். மத்ஸ்யேந்திரர் என்ற யோகியின் பெயரை ஒட்டி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை Half Lord of the Fishes என்றும் குறிப்பிடுவர்.

அர்த்த மத்ஸ்யேந்திராசனத்தில் முதுகெலும்பு நன்றாகத் திருப்பப்பட்டு, அதன் நெகிழ்வுத்தன்மை (flexibility) அதிகரிக்கப்படுகிறது. முதுகுத்தண்டிற்கு புத்துணர்ச்சி அளித்து அதன் செயல்பாட்டை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

Half Spinal Twist

அர்த்த மத்ஸ்யேந்திராசனத்தின்  மேலும் சில பலன்கள்
  • முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.
  • முதுகு வலியை போக்க உதவுகிறது.
  • நரம்புகளை பலப்படுத்துகிறது.
  • வயிற்றிலுள்ள அதிகக் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
  • இடுப்பு பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
  • பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை போக்க உதவுகிறது.
செய்முறை
  • விரிப்பில் கால்களை நீட்டி அமரவும்.
  • இடது காலை மடித்து வலது தொடையின் வெளிப்புறமாக தரையில் வைக்கவும்.
  • வலது காலை மடித்து இடது புட்டத்தின் அருகே தரையில் வைக்கவும்.
  • உடம்பின் மேல் பகுதியை இடது புறமாக திருப்பி, இடது கையை முதுகுக்கு பின்புறமாக வலது புறம் கொண்டு வந்து இடது கணுக்காலைப் பற்றவும். அல்லது இடது கையை இடது புட்டத்துக்கு சற்று பின்னால் தரையில் வைக்கவும்.
  • வலது கையை உயர்த்தி இடது காலின் முட்டிக்கு மேல் கொண்டு வந்து, வலது கால் முட்டியின் மேல் வைக்கவும்.
  • தலையை இடது தோளுக்கு நேர் மேலாகத் திருப்பவும்.
  • 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், கால்களை மாற்றி இதே முறையை செய்யவும்.
குறிப்பு

முதுகுத்தண்டு, முதுகு மற்றும் இடுப்பில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.

இன்று ஒரு ஆசனம் (27) – தண்டாசனம் (Staff Pose)

பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றும் தண்டாசனம் முதுகுத்தண்டை பலப்படுத்தும் அற்புதமான பயிற்சியாகும். ‘தண்டு’ என்றால் ‘கம்பு’ என்றும் ‘முதுகுத்தண்டு’ என்றும் பொருள். தண்டாசனம்  முதுகுத்தண்டை பலப்படுத்தும் ஆசனமாகும். இவ்வாசனம் முதுகுத்தண்டை நீட்சியடைய (stretches) வைக்கிறது.

Read More »

இன்று ஒரு ஆசனம் (25) – ஜானு சிரசாசனம் (Head to Knee Pose)

வடமொழியில் ஜானு என்றால் ‘முட்டி’, ‘சிரசா’ என்றால் ‘தலை’. முட்டி தலை ஆசனம் – அதாவது, தலையை கால் முட்டியில் வைப்பது (Head to Knee Pose) ஆகும். வேறு ஒரு வகையில், ஒரு

Read More »

இன்று ஒரு ஆசனம் (24) – வக்கிராசனம் (Twisted Pose)

வக்கிராசனம் என்றால் முறுக்கிய நிலை ஆகும். வடமொழியில் வக்கிரம் என்றால் முறுக்குதல் (twisted) ஆகும். முதுகுத்தண்டினை இடபுறமாகவும், பின் வலபுறமாகவும் முறுக்கி செய்வது ஆகும். இதனால், முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து முதுகெலும்புகளுக்கிடையிலான இறுக்கத்தை குறைக்கிறது.

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்