உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (16) – பஸ்சிமோத்தானாசனம் (Seated Forward Bend)

Seated Forward Bend

பஸ்சிமோத்தானாசனம் என்னும் ஆசனத்தை புஜங்காசனம், சலம்ப புஜங்காசனம் இரண்டுக்கும் மாற்றாகச் செய்யலாம். ‘பஸ்சிமா’ என்றால் வடமொழியில் ‘மேற்கு’ என்று பொருள். ‘உத்தனா’ என்றால் ‘மிகுவாக நீளுதல்’ (intensive stretching) என்று பொருள். பின் உடலைக் கொண்டு நீளுதல், அதாவது, அமர்ந்த நிலையில் உடலை முன் வளைத்து நீட்டுதல் ஆகும். இதில் உடலின் பின் பகுதி, குறிப்பாக முதுகுத்தண்டு முன்னோக்கி இழுக்கப்படுகிறது. முதுகுத்தண்டு இழுக்கப்படுவதால் அதன் இயக்கம் மேம்படுகிறது. முதுகுத்தண்டிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு சக்தி பாய்ச்சப்படுகிறது. அதனால், இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்வதனால் நோய்கள் அண்டாத நிலை ஏற்படுகிறது. அதனாலயே, ஆசனங்களில் பஸ்சிமோத்தானாசனம் ஒரு சிறந்த ஆசனமாகக் கருதப்படுகிறது.

Seated Forward Bend

பஸ்சிமோத்தானாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • கழுத்து தொடங்கி பாதம் வரை, பின் உடலின் அனைத்துத் தசைகளையும் நீட்டிக்கிறது (stretch).
  • நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.
  • வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தைப் பலப்படுத்துகிறது.
  • வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பைக் குறைக்கிறது.
  • சீரணத்தை மேம்படுத்துகிறது; அசீரணத்தால் ஏற்படும் தலைவலியைப் போக்குகிறது.
  • மாதவிடாய் கோளாறுகளையும், மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியையும் போக்குகிறது.
  • மனதை ஒருமுகப்படுத்துகிறது.
yoga gear
செய்முறை

பஸ்சிமோத்தானாசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளவும்.
  • முதுகை நேராக வைத்து மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே கைகளை மேல் நோக்கி உயர்த்தவும்.
  • மூச்சை வெளியேற்றிக் கொண்டே கைகளை முன்னால் நீட்டியவாறே முன் நோக்கி குனியவும்.
  • கைகளால் கால் பாதங்கள் அல்லது கால் கட்டை விரல்களைப் பிடித்துக் கொள்ளவும். கால் முட்டியை வளைக்கக் கூடாது. நெற்றியை காலில் வைக்கவும்.
  • 20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். பின், கால்களை விடுவித்து பழைய நிலைக்கு வரவும்.
குறிப்பு

பாதத்தைப் பிடிக்க முடியவில்லை என்றால் முடிந்த அளவு குனிந்து கை எட்டும் இடத்தில் பிடிக்கவும்.

Slipped disc மற்றும் sciatic கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தைப் பயிலக் கூடாது.

இன்று ஒரு ஆசனம் (18) – பிடிலாசனம் (Cow Pose)

இந்த ஆசனம் பூனை நிலைக்கு மாற்று ஆசனமாகும். ‘பிடிலா’ என்றால் ‘பசு’ என்று அர்த்தம். இந்த நிலையில் இருப்பது ஒரு மாட்டின் உடலமைப்பை ஒத்து இருக்கும். பூனை / மாடு நிலை (cat /

Read More »

இன்று ஒரு ஆசனம் (17) – மர்ஜரியாசனம் (Cat Pose)

வட மொழியில் மர்ஜரி என்றால் பூனை என்று பொருள். அதாவது பூனை, உடலை நீட்டி சோம்பல் முறுக்குவது போன்ற நிலை இந்த நிலை. எளிதாக இருந்தாலும் இதன் நன்மைகள் பெரியவை. உடலையும் மனதையும் சமநிலைப்படுத்தும்.

Read More »

இன்று ஒரு ஆசனம் (15) – சலம்ப புஜங்காசனம் (Sphinx Pose)

பாலாசனத்துக்கு மாற்று சலம்ப புஜங்காசனம்  ஆகும். பாலாசனம் என்பது குழந்தை குப்புறப் படுத்த நிலை என்று பார்த்தோம். சலம்ப புஜங்காசனம் என்பது முழங்கைகளைத் தரையில் தாங்கி மேலுடலை உயர்த்துவது. புஜங்காசனத்தை பாதி நிலையில் செய்வது

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்