வணக்கம்.
yogaaatral தளத்திற்கு வருகை தரும் உங்களுக்கு எங்களின் நன்றியும் வாழ்த்துகளும். இந்த வலைதளத்தின் நோக்கம் நலம் – அதாவது, மனிதர்களாகிய நம் நலம் மற்றும் நாம் வாழும் இந்த உலகின், அதன் இயற்கையின், அதிலுள்ள பிற உயிர்களின் நலமும் கூட. நம் உடலின் வனப்பு நம் உடல் மற்றும் மன நலன் பாதுகாக்கப்படும் வரை தான். அது போல, இந்த உலகத்தின் வனப்பு , அதன் சுற்றுச்சூழல் சமநிலை பாதுகாக்கப்படும் வரை தான். ஆக, இந்தத் தளத்தில் மனிதர்களாகிய நம் உடல், மன நலத்துக்கான யோகா முதலிய பயிற்சிகளோடு, எங்களால் இயன்ற வரையில், இந்த உலகின் உயிரினங்களையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதுதான். உலக வனப்பைப் பாதுகாப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.
‘யோகா பக்கம் அல்ல’ என்ற பகுதி உங்களுக்கு வியப்பு ஏற்படுத்தலாம். இப்பகுதி வாழ்வின் சின்னச் சின்ன சுவாரசியங்கள் சிலவற்றையும் சில அனுபவக் குறிப்புகளையும் கொண்டது.
yogaaatral பகுதிக்கு உங்களை வரவேற்கும் அதே நேரத்தில் உங்களின் மேலான கருத்துகளையும் பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
யோகாசனங்கள் - 1 முதல் 100 வரை
இந்தப் பகுதியில் பதுமாசனம் தொடங்கி சிரசாசனம் வரையிலும் 100 ஆசனங்கள், அவற்றின் பலன்கள் மற்றும் செய்முறையோடு அளிக்கப்ப்ட்டிருக்கின்றன. ஆசனப்பயிற்சியை சிறப்பாய் செய்வதற்கான குறிப்புகளோடு, எந்த ஒரு ஆசனத்தையும் யார் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிற தகவல்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
பிணி போக்கும் ஆசனங்கள்
இந்தப் பகுதியில் பிணி நீக்கும் ஆசனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. தலைவலி முதல் மன அழுத்தம் வரை உடல் மற்றும் மன நலனுக்கான ஆசனங்கள் விளக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைச் செய்வதால், பிணி நீங்குவதோடு மேலும் பல சிறந்த பலன்களையும் பெறலாம்.
முத்திரைகள் - உங்கள் நலம் உங்கள் கையில்
உலகில் பல்வேறு நாகரீங்களால் பண்டைய காலம் தொட்டே முத்திரைகள் பயிலப்பட்டு வந்திருக்கின்றன. சாதாரண உடல்நலக் கோளாறிலிருந்து நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவது மற்றும் மன அமைதியை வளர்க்கவும் முத்திரைகள் உதவுகின்றன.
திருமந்திரம் - கடவுள் வாழ்த்து
புத்தகத்திலிருந்து சில வரிகள்: "கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவ தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். உடல் கூறு அறிவியல் எவ்வளவு தெளிவாக உள்ளதோ அந்தளவு மருத்துவம் அதற்கானதாக இருந்திருக்க முடியும். அந்த வகையில் உலகின் முதல்முதல் உடல் கூறு மருத்துவ அறிவியலாளர் திருமூலராகத்தான் இருக்க முடியும்."
இயற்கையை வாழ விடுவோம்
ஆதிகாலம் தொட்டு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து மனித குலம் தன் சந்ததியினருக்கு விட்டுச் சென்றது அனுபவ அறிவை மட்டுமல்ல, வளமான பூமியையும் தான். ஆனால், கடந்த இரு நூறு ஆண்டுகளில் பூமியில் மாசு பெருமளவு பெருகியிருக்கிறது. இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் நாம் வருங்கால சந்ததியினருக்கு அளிக்கப் போவது நம் தவறுகளுக்கான தண்டனையைத்தான். இனி தாமதிக்க நேரமில்லை. இயற்கையைப் போற்றுவோம். பிற உயிர்களை நேசிப்போம்.
எங்கள் YouTube இணைப்பு: UCb4o43enAb2H-LV-n2QMN-g
சின்ன சின்ன சுவாரசியங்கள்
ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய துவக்கம். கிறிஸ்டோபர் ரீஃப் அவர்கள் கூறியது போல், "நீங்கள் நம்பிக்கையைத் தேர்வு செய்வீர்களானால் எதுவும் சாத்தியமே". வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன சுவாரசியங்கள் எதிர்பாராத நேரத்தில் சில்லென்ற காற்றோடு மண்ணின் மீது விழும் தூறல் போன்று, கடைவீதியில் நம் கண்ணைச் சட்டென்று கவரும் ஒரு மழலையின் சிரிப்பைப் போல், சில நிமிடங்கள் நம் மனதை இலகுவாக்கி விடும். அது போன்ற நிகழ்வுகளைத் தருவது தான் இந்தப் பக்கத்தின் நோக்கம்.