Yoga Pose for Day 73 - Eight Angle Pose (Ashtavakrasana)

வடமொழியில் ‘அஷ்ட’ என்றால் ‘எட்டு’ என்றும், ‘வக்கிரம்’ என்றால் ‘முறுக்குதல்’ என்றும் பொருள். இவ்வாசனம் அஷ்டவக்கிரர் என்ற முனிவரின் பெயரையொட்டி அஷ்டவக்கிராசனம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Eight Angle Pose என்று அழைக்கப்படுகிறது. அஷ்டவக்கிராசனம் கையால் உடலைத் தாங்கும் அருமையான ஆசனம். இவ்வாசனம் உடல் முழுவதிலும் ஆற்றலைப் பெருக்குகிறது. அஷ்டவக்கிராசனத்தில் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுகிறது. பிரபஞ்ச ஆற்றலை கவரும் தன்மை கொண்ட இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயிலும் போது உடலின் சமநிலை அதிகரிக்கிறது. அஷ்டவக்கிராசனத்தின் மேலும் சில […]
Tea Break
Tea break naturally follows Time for Herbs. To learn how to make life plant tea, which cures kidney stones, check this page.
Life Plant Benefits

கேட்ட நொடியில் விந்தையான பெயராகத் தோன்றும் இரணகள்ளியின் மருத்துவ குணங்கள் வியப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவை. இலைகளின் நுனிகளிலிருந்து புதுத் தாவரங்கள் உருவாகும் தன்மையைக் கொண்டிருப்பதால் ‘கட்டி போட்டால் குட்டி போடும்’ என்று இரணகள்ளியைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு. காலம் காலமாக பல்வேறு வகை மருத்துவ முறைகளிலும் இரணகள்ளி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் இம்மூலிகை ‘Leaf of life’, ‘Life plant’, ‘Air plant’ ‘Wonder of the World’ மற்றும் ‘Miracle leaf’ என்றும் அழைக்கப்படுகிறது. Table of Contents […]
Yoga Pose for Day 72 - Warrior Pose 2 (Virabhadrasana 2)

நாம் நேற்றைய பதிவில் வீரபத்ராசனம் 1-ஐப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்கப் போவது வீரபத்ராசனம் 2, அதாவது Warrior Pose 2. நேற்று குறிப்பிட்டிருந்தது போல் வடமொழியில் ‘வீர’ என்பதற்கு ‘போர்வீரன்’ என்றும் ‘பத்ர’ என்பதற்கு ‘சுபம்’ மற்றும் ‘துணை’ என்றும் பொருளாகும். அதாவது, அனுகூலமான போர்வீரன் என்று பொருள். வீரபத்ராசனம் 2-ல் மூலாதாரம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பழகும் போது உடல் மற்றும் மனதின் நிலையான தன்மை மேம்படுகிறது. மேலும், […]
Yoga Pose for Day 71 - Warrior Pose 1 (Virabhadrasana 1)

வீரபத்ராசனத்தில் மூன்று வகைகள் உண்டு. இன்று நாம் பார்க்கப் போவது வீரபத்ராசனம் 1. வடமொழியில் ‘வீர’ என்பதற்கு ‘போர்வீரன்’ என்றும் ‘பத்ர’ என்பதற்கு ‘சுபம்’ மற்றும் ‘துணை’ என்று பொருள். அதாவது, அனுகூலமான போர்வீரன் என்று பொருள். ஆங்கிலத்தில் இது Warrior Pose என்று அழைக்கப்படுகிறது. வீரபத்ராசனம் உடல் முழுவதற்கும் ஆற்றலை அளிக்கிறது. இவ்வாசனம் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்களைத் தூண்டுகிறது. தொடர்ந்து வீரபத்ராசனம் 1-ஐப் பழகும் போது உடல் மற்றும் மனதின் நிலையான தன்மை […]