15 Most Effective Yoga Poses for Stress Relief

மன அழுத்தத்தைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான ‘stress’ சமீபத்திய மாதங்களில் ‘மிக்ஸி’, ‘கிரைண்டர்’ என்ற வீட்டுப் பொருட்களின் பெயர் போல் பெரும்பாலான வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘அவருக்கு / அவங்களுக்கு stress அதிகம்’, ‘பிள்ளைகளுக்கு online வகுப்புகளால் stress அதிகம்’ என்பது பெரும்பாலான வீடுகளில் கேட்கும் குரலாக இருக்கிறது. எந்த பிரச்சினையிலும் மன அழுத்தத்தை அண்ட விடாதவர்கள் கூட ஒவ்வொரு முறை தொலைபேசி செய்யும் போதும் வரும் பதிவு செய்யப்பட்ட கொரோனா தகவல்களைக் கேட்டால் stress ஆகிவிடுவார்கள். […]
Magical Evening...

yogaaatral-க்காக மூன்று நாட்களுக்கு முன் திட்டமிட்ட பதிவு ஒன்றை இன்றாவது பதிவேற்றம் செய்து விட வேண்டும் என்று கணினி முன்னர் உட்கார்ந்திருந்த பொழுது மொட்டை மாடிக்கு உடனே வருமாறு கணவரிடமிருந்து ஒரு அவசர அழைப்பு. நிச்சயமாக இது வானஜாலம் பற்றியதுதான் என்று எண்ணி, பதிவை மறந்து மாடிக்கு விரைந்தேன். இதோ பதிவு, ஆனால், திட்டமிட்டது அல்ல, இயற்கை இன்று திட்டமிட்டதுதான் பதிவேற்றம் ஆகிறது. முதலில் கண்ணில் கண்ட காட்சி: ஒரு புறம் இப்படி: மறுபுறம் இப்படி: “பற […]
Mudras for Cold and Cough Relief

முத்திரைகளின் பலன்கள் குறித்து நாம் இதற்கு முந்தைய பதிவு ஒன்றில் பார்த்திருக்கிறோம். முத்திரை குறித்த கேள்வி பதில் பகுதியையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்று நாம் சளி மற்றும் இருமலைப் போக்கும் முத்திரைகள் பற்றி பார்க்கலாம். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் கூட சளி, இருமலை யாரும் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை. சளிக்கென்று வீட்டு மருத்துவம் செய்து கொண்டு சளியை சரி பண்ணிக் கொண்டாலும், ‘மண்டை உள்ள வரை சளி போகாது’, ‘சளிக்கு மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்களில் […]
Mother's Day - A Never-Ending Feeling of Love and Compassion

தாய்மை – பிள்ளை பெற்றவர்களுக்கானது மட்டுமல்ல பெண்களுக்கானது மட்டுமல்ல மனிதர்களுக்கானது மட்டுமேவும் அல்ல தாய்மை என்கிற உன்னத உணர்வு அனைத்தையும் கடந்தது சிறு பூச்சிகள் முதல் பெரிய விலங்குகள் வரை சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தாய்மை நொடிகளை நாம் அன்றாடம் உணரலாம்; பூனைக்குட்டியை அரவணைக்கும் நாய், நாய்க்குட்டியை பாதுகாக்கும் குரங்கு, மானை பாதுகாக்கும் சிங்கம் என இயல்பான தாய்மையைக் காண முடிகிறது. பிறரிடம் பரிவு காட்டும் குழந்தைகளிடமும் தள்ளாத வயதிலும் பிற குழந்தைகளிடம் பரிவு […]
How to Make Outdoor Walking Interesting?

நடைப்பயிற்சி செய்பவர்களில்தான் எத்தனை விதமானவர்கள்? நடைப்பயிற்சி செய்யும் முறைகளில்தான் எத்தனை வித்தியாசங்கள்? உண்மையில் நடைப்பயிற்சி நமது உடலுக்கு நலம் தருவதோடு அப்பொழுது நாம் காணும் காட்சிகளும் மனிதர்களும் முறையே நம் கண்ணையும் கருத்தையும் கவர்வது நமக்கு ஒரு உத்வேகத்தைத் தரவே செய்கிறது. நடைப்பயிற்சியின் நன்மைகள் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். காலை வேளை நடைப்பயிற்சியின் போது நம்மைச் சுற்றிலும் சுவாரசியத்திற்கும் நம்முள் எழும் உணர்வுகளுக்கும் பஞ்சமிருப்பதில்லை. நடைப்பயிற்சிக்கென்றே பிறந்தது போல் வருபவர்கள், நடைப்பயிற்சி முறைகளில் பல்வேறு உத்திகளை செயல்படுத்துபவர்கள், […]